அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு
சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை விவசாயத்துறையில் பூச்சி மருந்துக்கு மாற்றாக சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அனுபவத்தில் இதுபோன்ற மூலிகைகளை பூச்சிக்கொல்லியாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்துவதாக இருந்தால் அக்ரிசக்திக்கு எழுதலாம், அந்த செய்தியை அவர்களின் பெயரிலேயே நமது அக்ரிசக்தி செயலியில் வெளியிட தயாராக உள்ளோம்.
editor.vivasayam@gmail.com அல்லது 99430-94945 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்பலாம்
நமக்குத் தெரிந்த விவசாயத்தகவல்களை நாம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பது எதிர்கால சந்ததியினருக்கு நிச்சயம் பயனளிக்கும். எனவே விசயம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வமுரளி
ஆசிரியர்