இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா?
மூலிகையின் பெயர் – சிறுகுறிஞ்சான்
வேறுபெயர்கள் – இராமரின் ஹார்ன், சிரிங்கி
தாவரப்பெயர் – Gymnema Sylvestre, Asclepiadaceae.
பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், தண்டுப் பகுதிகள்.
வளரும் தன்மை – எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் சிறு குறிஞ்சான். இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதனுடைய இளங்கொடி பசுமையாகவும், அதன் மேல் வெளிறிய பசுமையுடன் இலைகளும், மஞ்சள் நிறப்பூக்களும் இருக்கும்
இதன் வேர், தண்டு ,செடி எல்லாமே பயனுள்ளது
பசியில்லாதவர்களுக்கு பசியினை தூண்டவும், விசகடிகளுக்கு இது மருந்தாகவும் பயன்படும்
சிறுகுறிஞ்சானுக்கு சர்க்கரை கொல்லி என்ற பெயர் உண்டு. சிறு குறிஞ்சானின் இலை சற்று தடிமனான கசப்பு சுவையுடயது. இது சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. கொழுப்புச்சத்தை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை தணிக்கும் சிறுகுறிஞ்சான், கருப்பையை தூண்டக்கூடியது. மாதவிலக்கை சரி செய்யும். சிறுகுறிஞ்சானை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான தேனீர் தயாரிக்கலாம். 5 கிராம் சிறுகுறிஞ்சான் இலை அல்லது பொடி எடுத்து கொள்ளவும்.