Site icon Vivasayam | விவசாயம்

என்ன உணவு தெரியுமா? – ரொட்டி

இன்றைய தெரிந்துகொள்ளலாம் பகுதியில் நாம் பார்க்க விருப்பது. 5000 வருடத்திற்கு முன்பு பயன்படுத்திய ஒரு உணவு பொருள். எகிப்து பிரமிடு கட்டிய தொழிலாளருக்கு இதை உணவாக வழங்கியிருக்கிறார்கள், சொன்னால் நம்ப மாட்டீர்கள் 30,000 வருடங்களுக்கு முன்பு கற்காலத்தில் இரண்டாம் பகுதி என்று சொல்லப்படுகின்ற பேலியோலித்திக் காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் உந்த உணவை சாப்பிடத்திற்கான தொல்லியல் எச்சம் கிடைத்துள்ளது 5ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை விற்க மிகப்பெரும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சைப்ரஸ் நாட்டு வழியாக செல்லும் கப்பல்கள் இந்த உணவின வாசத்தினைக் கேட்டு கப்பலை நிறுத்தி இங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் போவார்களாம்

இந்த உணவுப்பொருள் …….

அந்த உணவுப்பொருள் வேறு ஒன்றுமில்லை மக்களே
நம்ம ரொட்டிதான்……..

இன்று சரியான விடை யாரும் கூறவில்லை, நாம் சாப்பிடும் ஒவ்வொரு தானியம், பழம், செடி, கொடி என பலவற்றின் வரலாறு நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. தொடர்ந்து பயணிளுங்கள் தினமும் ஒன்று தெரிந்துகொள்ளலாம்

 

Exit mobile version