விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.தி.ந.ச.வெங்கடரங்கன், முன்னாள் நிறுவனர்,விஸ்வக்சொல்யுசன்ஸ், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்மண்டல இயக்குநர் (கௌரவ பதவி) அவர்களின் நேர்காணல். அவரின் வலைப்பக்கம் இங்கே:
https://venkatarangan.com
விவசாயம் வளர உங்கள் கருத்து என்ன?
விவசாயஉற்பத்தியில் எனக்கு நேரடி தொடர்பு இல்லையென்றாலும் நான் பார்க்கின்ற, கேட்கின்ற, படித்த விசயங்களை வைத்துக்கொண்டு நான்அறிந்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
இன்றைய சூழ்நிலையில் விவசாயித்திற்கு முக்கிய பிரச்சனை இரண்டு –
அவை: நிதி மற்றும் தகவல் பரிமாற்றம்
நிதி
1.விவசாயிக்கு தேவையான நேரத்தில் எளிதாக பணம் கிடைக்கும் வசதி இன்னமும் விவசாயிகளிடையே முழுமையாக சென்று சேரவில்லை, இதை முதலில் முறைப்படுத்தவேண்டும். ஏனெனில் நம் நாட்டில் பெரிய அளிவிலான விவசாயம் செய்யும் நிறுவனங்கள் மிகக்குறைவு. அதே சமயம் சிறு, குறு விவசாயிகள் மிக அதிகம்.எனவே சிறு குறுவிவசாயி்களுக்கு மிக அதிகமான தேவை நிதி ஆதாரம்– கடன் வசதி, அவை உடனுக்குடன் எளிதாக வழங்கப்படவேண்டும்.
அதே சமயம் நாம் அனைவரும் விவசாயி்க்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முயற்சி செய்யவேண்டும். நகரத்தில் உள்ளவர்கள் மட்டும் நான் விமானத்தில் போவேன், கார் வாங்குவேன் நவீன தொழில்நுட்பத்தினைபயன்படுத்துவேன், ஆனால் விவசாயிகள் மட்டும் வசதிகள் இல்லாமல் (கிராமத்திலேயே) இருக்கவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. அதே சமயம் விவசாயத்தினை குறைந்த அளவிலான விவசாயிகளே செய்ய வேண்டும் , அதிக உற்பத்தி மற்றும் லாபகரமாகவும் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாயத்திற்கு இத்தனை விவசாயிகள்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு கொள்கையையும்நமக்குள்ளாக நாம் வகுத்துக்கொள்ளவேண்டும். மீதமுள்ள விவசாயிகளை அவர்களின் விருப்பதற்கு ஏற்ப மற்ற வேலைகளுக்கோ,தொழிலுக்கோ, நகரத்திற்கோ வர வழி செய்ய வேண்டும். அவர்களின் பிள்ளைகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
2. தகவல் பரிமாற்றம்
விவசாயத்திற்கு தகவல் என்பது மிக அவசியம். எந்த இடத்தில், எந்த நேரத்தில் எவ்வளவு பொருள் கிடைக்கும் என்ற தகவல்களை நாம் கை விரலில்வைத்திருக்கவேண்டும். ஏனெனில் சர்வதேச கச்சா எண்ணெயின் மதிப்பு அடுத்த வருடம் என்னவாக இருக்கும் என்றுகணினி மூலமாக நாம் கணிக்க முடியும், ஆனால் அடுத்த வருடம் ஒரு விவசாயப் பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஊகமாகக் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். இதனால் விவசாயிகள் தங்கள் என்ன வருமானம் வரும் என்பதே தெரியாமல்,கண்ணைக்கட்டி செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.
ஒரு இரண்டு சக்கர வாகனம் உருவாக்கும் ஆலையில் அன்றைக்கு என்ன தேவையோ அந்த மூலப் பொருட்கள் மட்டும் தான் இருக்கும்,ஒன்றுக் கூட,ஒன்று குறைந்தோ இருக்காது – அந்த அளவு அவர்கள் திறமையாகவும்,விரையம் இல்லாமல் இருக்க முடிகிறது.இந்த முறைக்கு ஜப்பானியர்கள் காண்பாண் (Kanban–Just in time manufacturing) என்ற முறையே வைத்திருக்கிறார்கள். இதே போல நாம் விவசாயத்திற்கு செய்ய வேண்டும், கணினி உதவிக் கொண்டு நம் நாட்டில் இருக்கும் அறிவார்ந்த மென்பொருள் வல்லுனர்களைக் கொண்டு. இயக்குனர் ஷங்கரின் “பாய்ஸ்” படத்தில்“செந்தில்” சொல்வது போல “தகவலேசெல்வம்” (Information is Wealth),காணொளியைப்பார்க்க: http://bit.ly/2Bif96S
உலக அளவில் பெரிய நிறுவனங்களான வால்மார்ட் (Walmart), ஐக்கியா (Ikea), அமெசான்(Amazon) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கினால்/விரிவாக்கினால் நாம் வரவேற்கவேண்டும். நம் நாட்டில் தேவையில்லால் பெரிய நிறுவனங்கள் எல்லாமே கெட்டவர்கள் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது, அது உண்மை இல்லை. சிறியதோ,பெரியதோ தொழில்கள் சட்டத்தை மீறாமல்வந்தால் வரவேற்கவேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய நிறுவனங்களும்வந்தால் நமது விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களைவேகமாகவும்,பலருக்கும்அவர்களால் கிடைக்கும், அவர்களால் தான் அதற்கான பண முதலீடு செய்ய முடியும் – எல்லாவற்றையும் அரசே இலவசமாக செய்யும் அளவிற்கு நம் நாட்டில் தங்க சுரங்கங்களோ,எண்ணை கடல்களோ இல்லை.அவர்களிமிருந்து கிடைக்கும் உணவுப்பதப்படுத்துதல் மற்றும் இதர தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணத்திற்கு கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் முற்றிலும் கெடாத ஆப்பிளை வழங்க வால்மார்ட்நிறுவனத்தால் முடியும். அதற்கு தேவையான ஒரு கட்டமைப்பினைஅந்த நிறுவனத்தால்உருவாக்கி ஒரு தரமான பொருளை எல்லாவிடத்திலும் கொடுக்க முடியும். அது மாதிரி பல நவீன தொழில்நுட்பம்தான் நம் விவசாயத்திற்கு அவசியம். சங்க இலக்கியம், தமிழனின் பெருமை, ஆனால் அன்றைக்கு போல வீணாகும் விவசாயியின் உடல் உழைப்பல்ல.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் முறையான பதப்படுத்த தொழில்நுட்பம் இல்லாததால். குறிப்பிட்ட சதவீதம் அந்த பொருள்கள் வீணாக்கப்பட்டு மீதமுள்ளபொருட்களே நமது பயன்பாட்டுக்கு/ஏற்றுமதிக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு நிறுவனங்கள்
1970 களில் நடந்த கூட்டுறவு சங்கங்கள் இப்போதைய நவீன இணைய வெளி சந்தைக்கேற்ற வகையில் மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட விதமான தான்யங்கள், பழங்கள் சிலரால் (உதாரணம்: பணம் அதிகம் கொடுக்கக்கூடியவர்கள்) மட்டும்விரும்பப்படும்,உற்பத்தியாளர்களுக்கு அது அதிக லாபமும் கொடுக்க உதவும். ஆனால் இதை வணிக நிறுவனங்கள் செய்ய தயங்கும், அவர்களுக்கு அது பெரிய சந்தையாக இருக்காது. இதை சிறு, குறுவிவசாயி்களைஒன்றிணைத்து ஒருகூட்டுறவு அமைப்பு செய்து விவசாயிக்கும், நுகர்வோர்இருவருக்குமே உதவ முடியும். கூட்டுறவு நிறுவனங்கள் இணையம் வழியாக பொருட்களை நேரடி விற்பனை செய்யும் போது இடைத்தரகர்கள் தவிர்க்கப்படுவார்கள்.எதுவுமே லாபகரமாக இல்லை என்றால் எந்த தொழிலும் நீடித்திருக்காது என்பது என் கருத்து.
விவசாயி என்ன செய்யவேண்டும் ?
மக்களுக்கு என்ன தேவை என்பதை விவசாயி உணர்ந்து அதை உருவாக்கி விற்கட்டுமே? விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளை அது விற்பனை ஆகும் இடத்திற்கு சென்று பார்க்கட்டுமே– அது சூப்பர் மார்க்கெட் என்றால் அங்கே செல்லட்டுமே, யாராவது தடுப்பார்களா என்ன?.அப்படி சென்றால் அங்கு பொருளின் விற்பனை விலை என்ன, நுகர்வோரின் தேவை என்ன என்பதைநேரடியாகவே பார்த்து, பேசி, அதன்பின் இணையத்தில் உலாவி வாங்குபவர்களின் தேவையை உணரலாமே. இவர்கள் இப்படி சொன்னார்கள், அவர்கள் அப்படி சொன்னார்கள் என்பதை நம்பி உற்பத்தி செய்வதை விட விவரமறிந்து பயிர் செய்யலாமே.
விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர என்ன செய்யவேண்டும் ?
விவசாயிகளை வைத்து அரசியல் செய்யாமல் இருந்தாலேபோதும். அத்தியாவசியம் -விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார சிக்கல்களை அரசாங்கம் உடனடியாககளைந்தால்போதும் – அதே சமயம் விவசாயி வாங்கிய கடனை தள்ளுபடி செய்வார்கள் என்று காத்திருக்கக்கூடாது.ஏனெனில் இப்போது அதனால்தான் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. அதன்பின்விவசாயிககள்கந்துவட்டிக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் வாங்கிய கடனை விவசாயிகள் திரும்பக் கட்டிவிட்டால் இன்னமும் பிற நிறுவனங்கள் தைரியமாக விவசாயத்திற்குகடன் கொடுப்பார்கள்.உண்மையில் வங்கிகள் நம்முடைய நண்பர்கள், அந்த நண்பர்களை எதிரியாக்குவதும், நண்பர்களாக்கி க் கொள்வதும் நம்முடைய கையில் உள்ளது.கடனை திருப்பி கொடுத்து,எல்லா விவசாயிகளும் கம்பீரமாக நடைப்போடும் நிலைக்கு வர வேண்டும், வர முடியும்.
விவசாயிகளை கையைப்பிடித்துகூட்டிச்செல்லவேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.அவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு முதல் பணத்தேவையை, பயிர் காப்பீடு இவற்றை எளிதாக கிடைக்க செய்துவிட்டால், இந்த இணைய சந்தையில் அவர்களும் வெற்றியடைய முடியும்.
விவசாயிகளை காக்க பொதுமக்கள் செய்யவேண்டும் ?
விவசாயிகளின் கூட்டுறவு சங்கப்பொருட்களை பொதுமக்கள் ஊக்குவிக்கவேண்டும்,தரமான கலப்படமற்ற உற்பத்திகளுக்கு (அவை எங்கு கிடைத்தாலும்) ஏற்ற விலைக்கொடுத்து மக்கள் ஊக்குவித்தால் அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது, இதனால் தானாகவே நம் நாட்டில் விவசாயமும் செழிக்கும்.
நன்றி!