விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் மாயவரத்தான் என்றழைக்கப்படும் திரு.ரமேஷ்குமாரின் ( முதல் கருத்து இங்கே இடம் பெற்றுள்ளது
விவசாயம் உயர உங்களின் கருத்து
விவசாயம் உயர விவசாயத்தினை விவசாயிகள் மட்டுமே பார்க்க விடுங்கள். அரசியல்வாதிகளோ, தொழில் முனைவர்களோ அதில் ஈடுபட்டு அவர்களையும் அரசியல்வாதியாகவோ, விவசாயத்தினைக் கைவிட்டுச் செல்லும் தொழில் முனைவராகவோ மாற்ற வேண்டாம்.
விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகள், பரம்பரரை பரம்பரையாக தங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த நஞ்சில்லா விவசாயத்தினை முன்னெடுத்தாலே போதும், அதை விட்டுவிட்டு நவீன தொழில்நுட்பம் வழியாக அதை இதை செய்யறோம், அதிக பணம் ஈட்டலாம் என்று சொல்லி விவசாயி தன் விளை நிலத்தினை பாழ்படுத்தினால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
விவசாயிகளை காக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயப்பொருட்களை ஒழுங்கான விலை கொடுத்து வாங்கவேண்டும், ஆண்டுதோறும் நமக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கும் நாம் நாம் சாப்பிடும் பொருட்களான அரிசி, பருப்பு, பால், கீரை விலை உயரக்கூடாது என்று எதிர்பார்ப்பதும், அரிசி, பருப்பு போன்றவற்றை மானிய விலையில்தான் தரவேண்டும் என்று நாம் அனைவரும் நினைத்தால் அதை வாங்கும் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் விவசாயிகளின் பொருட்களுக்கு ஒழுங்கான விலையை கொடுக்க மாட்டார்கள் , விவசாயிகளிடமும் குறைந்த விலையிலயே வாங்க முயற்சிப்பார்கள்.
அதனால் விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு வரும். எனவே அரசாங்க மானியத்தில்தான் அரிசி கொடுக்கணும் என்று நினைப்பது மிக தவறான ஒன்று. பிஸ்ஸா சாப்பிடும் ஒருவர் மானியத்தில் கொடுப்பார்களா என்று பார்ப்பதில்லை, உண்மையிலயே கஷ்டப்படுகிறவர்களுக்கு அரசாங்கம் மானியம் கொடுப்பதில் தவறில்லை.
ஆனால் மீதியுள்ள மக்களும் எல்லாத்தையும் மானியத்தில் வாங்கவேண்டும் என்பது நினைப்பது தவறு. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் அதற்குரிய விலையை கொடுத்து வாங்கினாலே விவசாயம் செழிப்படையும் விவசாயத்தினை நம்பி செய்ய பலர் முன்வருவார்கள்.
முக்கியமாக விவசாயி்களிடமே நேரடியாக வாங்கினால் விவசாயிகள் இன்னமும் பலன் பெறுவார்கள், அரசாங்க கொள்முதல் கழகம்போன்றவை தானியங்கள் அதிக விளைச்சலில் இருந்து வீணாக செல்வதாக இருந்தால் அங்கே அரசாங்க கொள்முதல் மிக அத்தியாவசிய தேவையாக இருக்கும், ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது?
—
திரு.மாயவரத்தானின் கருத்துக்களுக்கு உங்கள் மறு மொழியையும் கீழே கொடுத்துள்ள மறுமொழி பொத்தான் மூலம் வழங்கலாம்.
நீங்களும் இந்த கருத்துக்களத்தில் பங்கேற்கவேண்டுமா? உடனே எங்களுக்கு மின்னஞ்சல் (editor.vivasayam@gmail.com அனுப்புங்க)
Nice plan sir i m excicute to my garden
சரியான கருத்து.விவசாயியை அவர்கள் போக்கில் விட்டால் போதும்.புது புது ரக விதைகளையும்,உரங்களையும் கொடுத்து விவசாய முறையையே மாற்றிவிட்டார்கள். மண்ணிலும் நஞ்சு,விளைந்த பொருளிலும் நஞ்சு. அதேபோல் விவசாயிகளிடம் கொள்ளை அடிப்பதை வியாபாரிகள்
மனிதாபிமானத்துடன் சிந்தித்து கைவிடவேண்டும்.
அருமையான கருத்துக்கள். எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
இது தான் யதார்த்தமும் கூட.
அரசு தரும் காப்பீடு குறித்தும் சொல்லி இருக்கலாம்.
ஆனால் அரசு மூக்கை நுழைக்காமல் இருப்பதே நல்லது.
விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இது போன்ற (வயலும் வாழ்வும் போல) ஒரு ஊடகமும் உதவலாம்
வெறும் அரசியல் செய்யாமல் அவர்களை விவசாயம் செய்ய விடுங்கள்
அரசியல் சாயம் வேண்டாம் விவ-சாயம் போதும்
விவசாயிகள் எல்லாரும் நாம் நினைக்கும் ஒரே பிம்பம் கொண்டவரில்லை…
சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்.
அதனால் உண்மையில் தவிக்கும் விவசாயிகள் யாரென்று பார்த்து எடுக்கும் வழிமுறைகளும் சொல்லவேண்டும்
Wonderful sir.. There is no political view only spoke about problems.. Welldone sir.. Yes here after some people’s know about the roll of politics in destroying Agry by doing unnecessary activities
Nice