Skip to content

தேயிலை பயிரைத் தாக்கும் நோய்

தேயிலைக்கொசு:ஹெலோபெல்டிஸ் அன்டோனி

வாழ்க்கை சரிதம் :-

பூச்சிகள் மெல்லியதாக, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படும். பெண் பூச்சி, முட்டைகளை மொட்டுக்கள் மற்றும் இலைகள் பறிக்கப்பட்ட தண்டுப் பகுதிகளில் சொருகிவிடுகின்றன. முட்டைகளிலிருந்து இளம் பூச்சிகள் வெளிவரும். இவை இறக்கைகளற்று காணப்படும். இளம்பூச்சிகள் 5 முறை தோலுரித்து முழுவளர்ச்சியடைந்த பூச்சியாக மாறும்.

நோயின் அறிகுறிகள்:-

இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் செடிகளின் குருத்துப் பகுதிகள், மொட்டுகள், தளர் இலைகள் போன்ற பாகங்களில் குத்தி, சாற்றை உறிஞ்சி உண்டு அதிக சேதம் விளைவிக்கும். பூச்சிகள் சாற்றை உறியும்பொழுது உமிழ் நீரையும் திசுக்களுக்குள் செலுத்துகின்றன. இதனால் இலைகளிலுள்ள திசுக்கள் கரிந்து, பழுப்பு அல்லது கரிய நிறமாக மாறிவிடும். நாளடைவில் இலைகள் சுருண்டு, வாடி உதிர்ந்து விடுகின்றன.

கட்டுப்பாட்டு முறைகள்:-

  1. கைவலை கொண்டு இளம்பூச்சிகளையும், வளர்ந்த பூச்சிகளையும் பிடித்து அழிக்கலாம்.
  2. லிண்டேன் தூள் மருந்தை எக்டருக்கு 10 கிலோ பயன்படுத்தலாம்.

பாசிய குறிய இலை புள்ளி : செபாலுரஸ் வைரேச்சென்ஸ்

வாழ்க்கை சரிதம்:

பாசி நுண்ணிய, துரு நிற மற்றும் பூசனம் போன்ற புள்ளிகளை இலையின் மேற்பரப்பில் உருவாக்குகிறது . அது சிவப்பு சாயங்களை போல காணப்படும்.பூசன வித்து காற்று அல்லது மழை மூலம் பரவுகிறது .பாசி இலைகளில் இருந்து கிளைகள் மற்றும் பழத்திற்குப் பரவலாம்.மோசமான மண் வடிகால், சமநிலையற்ற ஊட்டச்சத்து , உயர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள தேயிலை செடிகள் பாசி இலைப்புள்ளி தொற்று நோயால் பாதிக்க படுகிறது . எனவே முறையான சாகுபடி மற்றும் கருத்தரித்தல் மூலம் தாவரத்தை பலப்படுத்துதல் முக்கியம்பெரும்பாலான பாசி புள்ளிகள் இலைகளின் மேற்பரப்பில் வளர்கின்றன.பழைய தொற்று பச்சை கலந்த சாம்பல் ஆக தோல் போல் இருக்கும்.செபாலுரஸ் பொதுவாக தாவரதிற்கு தீங்கு விளைவிக்காது .

நோயின் அறிகுறிகள்:

இலைகளில் வட்ட வடிவில் , ஊதாவிலிருந்து சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் புண்கள் எழும்பி இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  1. தாவரத்திற்கு அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைக்க வேண்டும்.

  2. மோசமான வறண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்.

  3. தேயிலை செடிகள் மத்தியில் நல்ல காற்றோடத்தின் மூலம் ஈரப்பதம் மற்றும் இலையின் ஈரப்பத கால அளவை குறைக்கலாம் .

  4. பாதிக்கப்பட்ட பகுதிகளை போரடியாக்ஸ் கலவை மூலம் அகற்றலாம்.

  5. பாதிக்கப்பட்ட பகுதிகளை அழிக்கவும்.

  6. தலைச்சது, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சது பயன்படுத்தி மண் சத்து நிலையை மேம்படுத்தவும்.

சாம்பல் கருகல் நோய்:கொலட்டோட்ரைக்கம் வகை, பெச்டாலொட்டியோப்சிச் வகை
வாழ்க்கை சரிதம்:

சிறிய, கருப்பு புள்ளிகளின் புண்களில் உள்ளே பூஞ்சை வித்துகள் இருக்கும்.மழை தண்ணீர் மூலம் வித்துகள் ஒரு தாவரம் அல்லது பதிக்கப்பட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பரவுகிறது.வித்துக்கள் வேறு இலையை பாதிக்கும் போது அவைகள் ஒரு புதிய இலைப்புள்ளி அல்லது ஒரு மறைந்திருக்கும் தொற்றை தொடங்கும்.
நோயின் அறிகுறி:

சிறிய ,வட்ட வடிவில் வெளிர் பச்சை மஞ்சள் புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.பெரும்பாலும் புள்ளிகளை சுற்றி குறுகிய, மஞ்சள் மண்டலம் காணப்படும். புள்ளிகள் வளர்ந்து பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறி, பரந்து கிடக்கும் வளையங்களை கொண்டு, சிறிய கருப்பு புள்ளிகளாக தோன்றி இலை திசுக்கள் உதிர்வதுடன் இலைகள் முழுமையாக் உதிர்ந்து விடும்.எந்த வயதிலும் இலைகள் பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  1. தாவரத்திற்கு அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைக்க வேண்டும்.
  2. தேயிலை புதரை காற்று உட்போகுமாறு போதிய இடைவெளியில் வளர்பதன் மூலம் இலையின் ஈரப்பத கால அளவை குறைக்கலாம் .
  3. குளிர் காலம் மற்றும் கோடை பருவத்தில் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது போரடியாக்ஸ் கலவை 0.1% தெளிக்கவும்


கொப்புளம் கருகல்:எக்சோபெசிடியம் வேகக்சன்ஸ்

வாழ்க்கைச் சரிதம்:

இலையில் இருக்கும் பூஞ்சை வித்திகள் ஈரமான சூழலில் முளைத்து பாதிப்பை உண்டாக்கி 10 நாட்களுக்குள் அறிகுறிகளை உண்டாக்கும்.இலை திசுக்களில் ஊடுருவ முடியும்.காலம் : மூன்று முதல் நான்கு வாரங்கள்

நோயின் அறிகுறிகள்:

குண்டூசி துளை அளவு புள்ளிகள் இளம் இலைகளில் காணப்படும். இலை பெரியதாக வளரும் போது அப்புள்ளிகள் பெரியதாக, வெளிர் பழுப்பு நிறத்தை அடையும். 7 நாட்களுக்கு பிறகு புள்ளிகள் கரும் பச்சை நிறத்தில் காணப்படும்.பாதிக்கப்பட்ட இளம் தண்டுகள் வளைந்து , முறிந்து சிதைந்துவிடும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

  1. பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் தளிர்களை கவாத்து மூலம் நீக்கி அழிக்கவும்.
  2. போரடியாக்ஸ் கலவையை அல்லது 0.1 % காப்பர் ஆக்சி குளோரைடு தெளிக்கவும்.
  3. ஒரு ஹெக்டருக்கு 210 கி காப்பர் ஆக்சி குளோரைடை, 210 கி நிக்கல் குளோரைடு உடன் கலந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஜூன்செப்டம்பர் காலம் வரை மற்றும் அக்டோபர்நவம்பர் காலம் வரை தெளிக்கவும்.
  4. ஒரு ஹெக்டருக்கு டிரைடிமார்ப் 340 மற்றும் 560 மில்லி லேசான மற்றும் மிதமான மழை காலங்களில் தெளிக்கவும்.

தொகுப்பு : பிரேமா

Leave a Reply

editor news

editor news