குடிநீர் தேவை அதிகரிப்பு:-
மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5,000 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை நகரம்,தானிப்படி, சாத்தனுர் மற்றும் வாணாபுரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 322 மில்லியன் கன அடி நீரும் பயன்படுத்தப்படுகிறது.
இது போக, நீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்க்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ள காலங்களில் அணை நிரம்பினால், அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக சென்று கடலூரில் கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே போதிய அளவில் தடுப்பண்ணைகள் கட்டப்பட்டாததால் தான், தண்ணீர் வீணாக வெளியேறி, கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் தடுப்பண்ணைகள் கட்டவேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து, தண்ணீர் விணாக கடலில் கலப்பதை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முற்றும்…