Skip to content

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

2015ல் வீணான 32 டி.எம். சி:-

எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ் செங்கம்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தலா, 115,99 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த, எம். வெளாம்பட்டி, செனக்கல் என்ற பெயரில் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், 40 ஆண்டுகளுக்கு மேலாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு தடுப்பணை கட்டப்பட்டால், அரூர், மொரப்பூர், ஊத்தங்கரை பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிர்ச்சனையும் தீரும். மேலும், கீழ்செங்கப்பாடி பகுதியிலும் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2015 பெய்ந்த கனமழை காரணமாக, தென்பெண்ணையாற்றில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டு, 32 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது குறிப்பிட்டதக்கது. கிருஷ்ணகிரி, 140 கி,மீ.,க்கு பாயும் தென்பெண்ணையாறு, பின்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு செல்கிறது. இந்த அணை, 1958ல் கட்டப்பட்டது. இதன் உயரம் 119 அடி. நீர் கொள்ளளவு, 7,321 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையால், திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில், இடது புற கால்வாயால், 24 ஏக்கரும் வலது புரம் கால்வாயால், 21 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.

தொடரும்….

Leave a Reply

editor news

editor news