Site icon Vivasayam | விவசாயம்

தாமரை மலர்

Closeup of yellow lotus flower beautiful lotus.

         மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்திய நாட்டின் தேசிய மலர் இதுவேவியட்னாவின் தேசிய மலர்!

         தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிற பூ இதுவே. இது அழுக்கு நிறைந்த இடத்தில் பூத்தாலும் பார்ப்பதற்கு  கண்ணை கவரும் வகையில் உள்ளதே.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

       தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம்.அறிவியல் பெயர் : நெலும்போ நூசிபேரா

        இது புனிதமாக போற்றப்படுவதுடன் வழிபாட்டுக்கும் பயன்படுகிறது.இது மருந்தாகவும் பயன்படுகிறது. இது நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படும். வெண்தாமரை, செந்தாமரை நிறத்தில் பூக்கள் உண்டு. வெண்தாமரை மருத்துவத்தில் பயன்படுகிறது.

        செந்தாமரை லட்சுமி கடவுளின் ஆசனமாகவும், வெண்தாமரை சரஸ்வதி கடவுளின் ஆசனமாக இருக்கிறது. இது காலையில் சூரியன் உதிக்கும் போது மலரும். மதிய வேளையில் இதழ்கள் மூடிக்கொள்ளும். இலையில் தண்ணீர் ஒட்டாது.

தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்ல

என்ற பாடலும் உண்டு. இதன் விதைகள் பல ஆண்டுகளுக்கும் முளைக்கும் தன்மை கொண்டது.

பூவின் பயன்கள்:

        இது ஒரு சதுப்பு நிலத் தாவரமாகும். இது ஒரு மூலிகை தாவரம். இதன் அனைத்து பாகங்களும் பயன்படக்கூடியவை மற்றும் உண்ணக்கூடியவை.மூன்கேக் போன்ற சீன இனிப்பு வகைகளில் தாமரை விதைப் பசை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

        தாமரையின் கிழங்கும்,விதையும்மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை.கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.வைட்டமின் சி,மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.தாமரை மலரை நிழலில் உலர வைத்து,இதனை கஷாயம் செய்து குடிக்கின்றனர்.தாமரை விதையின் பருப்பை சாப்பிட்டால் இதயம் பலப்படும்.சிறுநீரகங்கள் வலுப்படும்.

        வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் கட்டுப்பட, மூளைக்கு பலம் தருவதற்கு பயன்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும்.கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்.

திருக்குறள்:

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

                                                                       உள்ளத்து அனையது உயர்வு.

                                                                       –திருவள்ளுவர்.

குளத்தில் நிறைந்துள்ள தண்ணீரின் அளவினதாக இருக்கும் தாமரையின் (நீர்ப்பூவின்) நீளம். அதுபோலச் சமுதாயத்தின் உள்ளப்பாங்கின் அளவுக்கு மானிடரின் உயர்வு இருக்கும்

தாமரைக்கு வழங்கும் பெயர்கள்:

1 அரவிந்தம், 2.தாமரை, 3.பங்கேருகம், 4. கோகனகம், 5.பதுமம், 6.முளரி, 7.வனசம், 8.புண்டரீகம், 9.அம்போருகம், 10.கமலம்.

ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்
அகத்தியர் குணவாகடம்


பொருள் வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும்.

பொழிலின்
எழில்
கதிரவன்
கை தொட
சிவக்கும் பெண்

தாமரை கொடியோ!!!
—-
கவின் சாரலன்

தொகுப்பு : பிரியங்கா

Exit mobile version