கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.
அறிவியல் பெயர்: அல்லோ வேரா
குடும்பம் :லில்லியேசியே
தாயகம் :ஆப்பிரிக்கா
பொருளாதார முக்கியதுவம்(Economic importance):
கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுக்களில் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சித்தமருத்துவத்தில் கற்றாழைச்சாறு இருமல்,சளி, குடற்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகவும், மேலும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
தட்பவெப்பநிலை(climate):-
வெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம்.
மண் வளம் (soil):-
தரிசு நிலம், மணற்பாங்கான நிலம் மற்றும் பொறை மண் போன்றவை சாகுப்படிக்கு ஏற்றது. மேலும் நல்ல வடிகால் வசதியுடன் 7-8.5 காரத்தன்மையுடைய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
நடவு(PIanting):-
ஜீன் – ஜீலை மற்றும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம்.
நிலம் தயாரித்தல் (Land preparation):-
நிலத்தை இரண்டு முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தை சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும்.
விதைப்பு (Sowing):-
செடிக்கு செடி மூன்று அடி இடைவெளி விட்டு பக்கக் கன்றுகளின் வேர்களை கார்பன்டசிம் மருந்தில் ஐந்து நிமிடங்கள் நனைத்து நடுவதால் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
உரநிர்வாகம்(Fertilizer management):-
தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு, நடவு செய்த 20வது நாளில் 30 கிகி தழைச்சத்து மற்றும் 120 கிகி ஜிப்சம் உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிக அளவு கூழ் மகசூல் கிடைக்கும்.
நீர் நிர்வாகம்(Water management):-
மொத்த பயிர் கலத்தில் 4 அல்லது 5 நீர்ப்பாசனம் போதுமானது.
அறுவடை(Harvest):-
நடவு செய்த 6 முதல் 7 மாதங்களில் பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும். இத்தருணத்தில் இலையில் அதிகளவு அலோயின் வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரொடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மகசூல் (Yield):-
எக்டருக்கு 15 டன் கற்றாழை இழை மகசூல் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூல் பிரித்தெடுக்க வேண்டும்.
eppadi intha jell export seithu vanigam seivathu. ethenum contact details irunthal send pannavum nanbarkaley. nan katralai saagupadi seithu eppadi export seivathu 1ton jel ku evalo earn panalam