வெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் : அல்லியம் சீபா இது தண்டுள்ள சிறிய செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
தரமான வெங்காயக் குமிழ்கள் சேகரிப்பு!!
வருடம் முழுவதும் தேவைப்படும் முக்கியமான காய்கறி வெங்காயமாகும். எனவே வெங்காயக் குமிழ்களின் சேமிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
ஆடிப் பட்டம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை விட தை பட்ட பருவத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தின் சேமிப்புக் காலம் பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமையும். அவையாவன: நடவு பருவம், இரகங்கள், குமிழ் உறக்க நிலை, உரங்கள், நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் பின் செய்யும் நேர்த்திகள் மற்றும் சேமிப்பு இடம் ஆகும்.
அறுவடைக்குப் பிறகு தாள்கள் மஞ்சள் ஆக மாறும் வரையிலும், வெங்காயத்தின் கழுத்துப் பகுதி மெலியும் வரையிலும் நிலத்திலே உலரவைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் உலர வைக்க வேண்டும். நிழலில் உலர்த்துவதால் குமிழ்கள் வெயிலின் நேரடித் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குமிழ்களின் நிறமும் அதிகரிக்கிறது மற்றும் குமிழ்களின் வெளிப்புறத்தோலும் நன்கு உலர்ந்துவிடுகிறது.
ஆனால் அதிகமான சூரிய வெப்பம் படும்பொழுது அழுகுதல், வெளித் தோல் சுருங்குதல் போன்றவை ஏற்படுகின்றது. நடுத்தர அளவுள்ள குமிழ்கள் மற்றும் காயம் படாத தூசு இல்லாத குமிழ்களையே சேமிப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
குமிழ்களை சணல் பைகள், பிளாஸ்டிக் வலையுள்ள பைகள், பிளாஸ்டிக் மற்றும் மரத்திலான கூடைகளில் சேமிப்பது நல்லது. பெரும்பாலான விவசாயிகள், பிளாஸ்டிக் நைலான் வலையுள்ள பைகளையே உள்ளுர் மற்றும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் இவைகள்தான் மலிவான விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இந்தப் பைகள் கவர்ச்சியாகவும் உள்ளது. வெங்காயத்தை பைகளில் அடைத்த பிறகு வெங்காய சேகரிப்புத் தளங்களில் 5 அடி உயரம் வரை அடுக்காக வைக்கலாம். வெங்காயம் சேமிக்க பல்வேறு வகையான சேமிப்பு அமைப்புகள் உள்ளன. அவையாவன: கீழ் மற்றும் பக்கவாட்டில் காற்றுப்புகும்
குமிழ்களை சணல்பைகள் பிளாஸ்டிக் வலையுள்ள பைகள், பிளாஸ்டிக் மற்றும் மரத்திலான கூடைகளில் சேமிப்பது நல்லது! குளிர்பதன அறையிலிருந்து குமிழ்களை வெளியே எடுப்பதற்கு முன்பு சிறிது சிறிதாக வெப்பநிலையைக் குறைத்தால், நுண்ணுயிர்களால் ஏற்படும் அழுகலைத் தடுக்கலாம்.
இரண்டு வரிசை சேகரிப்பு அமைப்பு மற்றும் குறைந்த விலை கீழ் காற்றுப்புகும் ஒர் அடுக்கு சேமிப்பு அமைப்பு ஆகியவையாகும். சேமிப்பதற்கு 30-350 செல்சியஸ் மற்றும் 65-70% ஈரப்பதம் நிலை அந்த அமைப்பிற்கு. இருக்க வேண்டும்.
குளிர்பதன அறைகளில் சரியான ஈரப்பதத்தில் வெங்காயத்தை சேமிப்பதால் அதன் சேமிப்புத் தன்மையும், காலமும் அதிகரிப்பதோடு அறுவடைக்குப் பின்வரும் இழப்பையும் குறைக்கிறது. குளிர்பதன அறைகளில் சேமிப்பதற்கு தேவையான வெப்பநிலை 0 செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 65-70% ஆகும். இந்த சேமிப்பில் சேமிப்பு இழப்பு வெறும் 5% மட்டுமே, இதுவும் நீர் இழப்பு காரணமாகவே ஏற்படுகிறது.
சேமிப்பு அறைகளில் வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் கண்காணிப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அறித்து அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர முடியும். மிகக் குறைந்தவெப்பநிலையில் (<-20br) வெங்காயத்தில் உறைதல் ஏற்படும். அதிகவெப்பநிலையும் மற்றும் அதிக காற்றின் அழுத்தமும் (<75%) குமிழ்களில் அழுகலை ஏற்படுத்தும். காமா கதிர்கள் (கோபால்ட் 60) 60 கிராட் (krad) மூலம் கதிரியக்கம் செய்தால் முழுவதுமாக குமிழ்கள் முளைத்தலை தடுத்துவிடலாம்.
தொடர்புக்கு: ஷோபா திங்கள் மணியன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை-3.
நன்றி
மண்வாசனை