Site icon Vivasayam | விவசாயம்

மலர் அலங்கார வடிவமைப்புகள்

 

நோக்கம்: பூக்களை பயன்படுத்தி பல்வேறு வகையான மலர் அலங்காரம் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல்

மலர் அலங்காரம் ஒரு கலையாகும். இது பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. பூ அலங்காரம் குவிமையம், வடிவம் மற்றும் நிரப்பிகள் அகியவற்றை பொருத்து ஏழு வகையாக பிரிக்கப்படுகிறது.

1.கிடைமட்ட மலர் அலங்காரம்(Horizontal flower arrangement): இவ்வகை மலர் கொத்து மேசைகளின் மையத்தில் அலங்காரமாக வைக்க பொருத்தமானது. பெரிய அளவு கொண்ட பூக்கள் மையத்திலும், தொங்கும் மலர் கிளைகள் இருபக்கத்திலும் உள்ளவாறு அமைக்கப்படுகிறது.

2.செங்குத்து மலர் அலங்காரம்(Vertical flower arrangement): நீண்ட தண்டுடன் கூடிய டியூலிப், ரோஜா, கார்னேசன் போன்ற மலர்களை செங்குத்தாக நிறுத்தி, குட்டை தண்டுடைய மலர்களை நிரப்பிகளாக அடுக்கி இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அறை சுவர்கள் மற்றும் வரவேற்பறைகளை அலங்கரிக்க உதவுகிறது.

3.முக்கோண மலர் அலங்காரம்(Triangular flower arrangement): இவ்வகை பூங்கொத்து, நீள தண்டுடைய பூக்கள் நடுப்பகுதியிலும், பக்கவாட்டில் சிறிய மலர்களையும் வைத்து முக்கோண வடிவில் அமைக்கப்படுகிறது. இம்மலர் கொத்து விழாக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

4.பிறைவடிவ மலர் அலங்காரம்(Crescent flower arrangement): வளையும் தண்டுடன் கூடிய கிளாடியோலஸ், கார்னேசன் போன்ற மலர்களை பிறை வடிவத்தில் வளைத்து இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.

5.நீள்வட்ட வடிவ மலர் அலங்காரம்(Oval flower arrangement): இம்மலர் அலங்காரம் எல்லாம் இடங்களுக்கும் பொருத்தமானது. வெளிர் நிறமுள்ள பூக்கள் மையத்திலும், அடர் நிறம் கொண்ட பூக்கள் வெளி அடுக்குகளிலும் அமைத்து இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.

6.சிறுமலர் அலங்காரம் (Minimal flower arrangement): இது உள்ளூரில் கிடைக்கும் சிறிய மலர்களை கொண்டு செய்யப்படுகிறது. இது உள்ளரங்க அலங்காரத்திற்கு உதவுகிறது.

7.ஹோகார்த் வளைவு மலர் அலங்காரம்(Hogarth’s curve or lazy’s’ flower arrangement): இது மிகவும் நுட்பமான வடிவமைப்பைக்கொண்டது. பூங்கொத்து தயாரிக்கும் வல்லுநர்களால் மட்டுமே எளிதாக செய்ய முடியும். இதில் பூக்கள் ‘s’ வடிவத்தில் அமைக்கப்படுகிறது. இத்தகைய பூங்கொத்துகள் தயாரித்து, திருமண விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழாக்களில் பயன்படுத்தலாம்.

Exit mobile version