அம்பிகையின் அமிர்தப் பிராசாதமே பூக்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம்தானே? ஒரே சமயத்தில் பூத்து தமிழ் நிலத்தையும் தமிழர்களது நெஞ்சங்களையும் கொள்ளை கொள்கிறதுஇந்த பூ. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. இந்த பூவால் கொடைக்கானலில் எழுந்தருளியுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலும் விசேஷம்தான்..இந்த மலர்களைப் பறித்து சூடிக்கொள்ளவோ ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கவோ செய்வதைவிட கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கண்ணாரக் கண்டு மனம் நிறையவே விரும்புகிறது. இந்தப் பூவுக்கு மட்டுமே இந்தப் பெருமை. இந்தத் தமிழ் பூவுக்காக நமது அரசாங்கம் தபால் தலை வெளியிட்டுள்ளது.
சங்க காலத்தில் நிலங்களை 5 வகையாக பகுத்துள்ளனர். அவை,குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை ஆகும்.நிலங்களில் முதன்மையானது குறிஞ்சி.
சங்க இலக்கியம் வெகுவாகக் கொண்டாடும் தமிழ்ப்பூ, சங்கத் தமிழ் இலக்கியம் குறிஞ்சிப்பூவை பல பெயரிட்டு அழைக்கிறது. நீலக் குறிஞ்சி, கல் குறிஞ்சி, செறு குறிஞ்சி நெடுங்குறிஞ்சி இடக் குறிஞ்சி என்றும் வெள்ளைப்பூக்களைப் பூக்கும் கருத்தண்டை கொண்ட குறிஞ்சியை கருங்காற் குறிஞ்சி என்றும் போற்றுகின்றன.தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.
செடியின் தன்மை:
தாவரவியல் பெயர் : ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா
கைகளும், உதடுகளும் நடுங்குகிற கடும் குளிர் இடத்தில் பூக்கும் பூ குறிஞ்சிப்பூ.
குறிஞ்சிச் செடிகள் புதர் வகையைச் சேர்ந்தவை.
இதன் பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.
பூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டிருக்கும்.
உயரம் 30-60 செ.மீ. , இதற்கேற்ற தட்ப வெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரை வளரும்.
மலைப்பாங்கன இடங்களில் மட்டுமே வளரும்.
மலரே! குறிஞ்சி மலரே! ……
என்னும் பாடல் வரிகள் உண்டு.
காணப்படும் இடங்கள்
குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணப்படுகின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளிலேயே காணப்படுகின்றன. மேலும் 150 வகை செடிகள் இந்தியநாட்டில், குறிப்பாக 30 மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஆணைமலை, ஊட்டி, கொடைக்கானல்
கேரள மாநிலம் இடுக்கி, மூனாறு.
நீலகிரி பெயர் வரக்காரணம்:
இச்செடிகளின் பூக்கள் நீல நிறத்தில் தோன்றுவதால் தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. நீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.
பூக்கும் காலம்:
இச்செடிகளில் மலர்கள்சில மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பன்னிரண்டு மாதத்திற்கு ஒருமுறையும், 36 வருட்டங்களுக்கு ஒருமுறையும் பூக்கும்.
இந்த மலரில் கிடைக்கும் தேனானது மிகவும் இனிமையானது. ஆகையால் இம்மலர்களை நாடி ஆயிரக்கணக்கான தேனீக்கள் வரும்.
கொடைக்கானலில் கடந்த 2005-2006 ல் நீலக்குறிஞ்சி பூ மலை முழுதும் பூத்து குளுங்கியது.
நித்திலமாய் என்னுள் அமிழ்ந்திட்ட
இலக்கிய நுகர்வில் முயங்கிக்கிடந்த நாட்கள்!
மார்கழிப் பனித்துளியாய்,
மின்னும் மின்னினியாய்,
ஒன்றை கொன்றைப் பூவாய்,
மரமல்லியின் வாசமாய்,
மனதின் ஓரத்தில் அமிழ்ந்திட்ட பசுமையது…
பருவமாற்றங்கள் இயற்கைக்கு,
நிகழ்கால மாற்றங்கள் பெண்ணுக்கு,
என்னுள் என்னைத்தேடி தொடங்கிட்ட யாகமது
வரமா? சாபாமா?
துளைத்திட்ட வினாக்களுக்கு
விடைதேடி பின்னோக்கி சிறுபயணம்
பாலாற்றங்கரையில் சிறுவீடுகட்டி
பொங்குநுரையால் வழிபட்ட காலம்!
பாவாடையில் மீன் பிடித்த வாசம்
இன்னும் மனதில் மிச்சம்
பகுத்தறிவு பாசறையில் அனல்தகிக்கும்
வாதத்தில் கல்லூரி
நுணாமரம் கொழுந்திட்ட நாட்கள!
ஒலிப்பெருக்கி துணையின்றி முழங்கிய பாவை!
அரபிக் கடலோரம் மணமாகி வந்திட்டாலும்
ஆரண்ய ஆட்கொணர்வு மனதில் எங்கும்!
சிந்தனைக் கூட்டை சுட்டெரித்து சுற்றிவளைத்து
செப்பிய வார்த்தைகள் சிந்திய நெய்யாக்கி,
செந்தீயை என்னுள் கிளர்ந்தெழு!
வேலிகளை உடைத்து வந்தேன்
என் குறிஞ்சிப் பூ குழவியை
ஞாலம் காண
– பிரவினா
தொகுப்பு : பிரியங்கா