தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். .
இதில் சங்குப்பூ பற்றி காண்போம்.
கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது.சங்கு வடிவில் காணப்படுவதால் இதற்கு சங்குபூ என பெயர் வந்தது.
வெள்ளை நிறமலர்கள், நீல நிறமலர்கள் என இரு செடிகள் உண்டு. இதில் வெள்ளை நிற மலர்களை கொண்ட செடிகள் மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் வேர், இலை, விதை மூன்றும் பயன்படுகிறது.
பயன்கள்
இலைகளுடன் உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது தடவி வர வீக்கம் குறையும்.
யானைக்கால் நோய் முதல் நிலையிலேயே இதன் இலையை எண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் குறையும்.
வேரை பால் ஆவியில் அவித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, இரண்டு கிராம் அளவு காலை மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். 15-40 நாள் சாப்பிட வேண்டியிருக்கும்.
குழந்தைகளின் வலிப்பு நோய்க்கு இதன் விதைப்பொடி சூரணம் நல்ல மருந்து. விதைகளை பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து 300மில்லி கிராம் முதல்500 மில்லி கிராம் அளவு தேனில் கலந்து கொடுத்து வர நோய் குணமாகும்.ஆங்கிலமருந்துடன் சேர்த்தும் கொடுக்கலாம்.
விதைத்தூள் 140 கிராம், இந்துப்பு 140 கிராம் சுக்குத்தூள் 20 கிராம் கலந்து யானைக்கால் நோயின் தொடக்ககாலத்தில் மூன்று கிராம் அளவு சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அளவை கூட்டிக்கொள்ள வேண்டும். சாப்பிட்டு வந்தால் பேதியாகி வீக்கம் குறையும்.
சங்குன்னா சும்மாவா ! இனி இந்தக் கொடியைப் பார்த்தால் கொஞ்சம் மரியாதையோடு அணுகுங்கள் !
நன்றி பசுமைவிகடன்