Skip to content

ஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்!

விவசாயிகள்அதிகமாக சம்பாதிக்க அரசு விடுக்கும் அழைப்பு!

     நம் நாட்டில் ஏற்றுமதி பொருட்களை நல்ல முறையில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போதும் நம் நாட்டை முன்னேற்ற ஒரு சிறந்த வழியாக மாறும். அதுமட்டுமல்லாமல் நம் நாட்டின் சிறப்பு உலகமெங்கும் பரவிக் காணப்படும்.

     அரிசி, கோதுமை, சர்க்கரை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் ஏற்றுமதியில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

     ஏற்றுமதி என்ன செய்ய வேண்டும்?எதை செய்ய வேண்டும்இதற்கு நம் அரசே உதவ முன்வந்துள்ளது.

     விவசாயிகள், விவசாய உப தொழிலதிபர்கள், உணவுப் பதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இதை நம் விவசாயிகள் எப்படி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?

     இது தொடர்பாக இந்திய அரசின் தொழில் வணிகத் துறை செயலாளர், ரீடா தியோதியா அவர்கள் சமீபத்தில் புதுடில்லியில் பேசும்பொழுது,

    “வேளாண்மை மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் இந்திய வேளாண் பொருட்களை உலகம் முழுதும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண் பொருட்களுக்கான சந்தைகளை இந்தியர்களாகிய நாம் அடையாளம் காண வேண்டும். அதன் மூலம் இந்திய வேளாண் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியும். வேளாண் பொருட்களின் மதிப்பை உயர்த்த வேண்டும். நாம் இப்பொழுது மதிப்புக் கூட்டப்படாத பொருட்களையே பெரும்பான்மையாக ஏற்றுமதி செய்து வருகிறோம். மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மிகக் குறைவாகவே உள்ளது…

      இது மிக மிக கவலை அளிக்கும் செய்தி ஆகும். மிகச் சாதாரணமான உணவுப் பதப்படுத்தும் பணிகளுக்கோ, அல்லது மதிப்புக் கூட்டுவதற்கோ தான், இந்தியாவில் இருந்து பெரும்பான்மையான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. இந்நிலையை மாற்றி இந்தியாவிலேயே வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    அடுத்து வேளாண் நிறுவனங்கள் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவது, நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் புதிய சந்தைகளில் நுழைய முடியும். சர்வதேச வாடிக்கையாளர்களை இங்கு வரவழைத்து, இங்கு பின்பற்றப்படும் அனைத்து தரக் கட்டுப்பாட்டு முறைகளையும் விளக்க வேண்டும். இதன் மூலம் நல்ல சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.

     இயற்கை வேளாண் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு அதற்கான சான்றுடன், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும். உலகமெங்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தாத இயற்கை வேளாண் பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதை இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவ அரசு தயாராக உள்ளது” என்று வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக தன்னை எப்பொழுதும் யாரும் சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்…அவரைத் தொடர்புகொள்ள…

Reeta thiyothiya. Secretary ministry of industry and commerce,new delhi,ph:011-2306 3664 E isoffice@ nic.in, www.commerce.gov.in

வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு www.apeda.gov.in பாருங்கள்.

     ஏற்றுமதியின் தரத்தை உயர்த்தும் போது நம் நாடும் முன்னேறும்.பிற்காலத்தில் நம் சந்ததிகளும் வாழ்த்தும்

வாருங்கள்! நம் நாட்டை உயர்த்த பாடுபடுவோம்!!

Leave a Reply

editor news

editor news