நாம் வாழும் உலகம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்பதுற்கு உதாரணமாக 20ம் நூற்றாண்டையும், 21ம் நூற்றாண்டையும் சொல்லலாம். அந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் கழிவுகள் ஓடுகின்ற ஆறையும், சேருகின்ற கடலையும், சுவாசிக்கும் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கின்றன
வாழும் நிலத்தையும்,அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் தூய்மையாக வைத்திருப்பது மாந்தர்களின் கடமை.
ஆனால், இன்றோ உலக நவீன மயமாதலால் இம்மூன்றும் அடுத்த சந்ததிக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்துவிடுமா என்று நினைக்குமளவுக்கு பூமி மிகவும் மாசடைந்து உள்ளது.
நிலம் மாசு
அதிக இரசயான உரங்கள் பயன்படுத்துவதால் விளைநிலங்கள் அதன் தன்மையில் மாறுபடுகின்றன. அதோடு மட்டுமல்ல பணம் அதிகமாக கிடைக்கும் என்பதால் தாங்கள் வளர்த்த மரங்களையே காவு கொடுக்கவும் தயங்காத நிலைக்கு நம் மக்கள் மாறிவருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவும் மண் வளத்தை கெடுத்து விடுகிறது.
மேலும் இயற்கையாக உள்ள சத்துக்களையும் நிலங்கள் இழந்து விடுகின்றன. தமிழ்நாட்டில்,நகரங்களில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையினால் வெளியேற்றப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீரினால் ஆற்றுப் படுகையிலுள்ள நிலங்கள் அதன் தன்மை மாறி காணப்படுகின்றது.. இப்படியே சென்றால் மனிதன் எங்கும் வசிக்க முடியாத நிலைக்கு சென்றுவிடும்.
நீர் மாசு
“நீர் அழியச் சீர் அழியும்” என்பது பழமொழி.
நாட்டில் உள்ள குப்பைகளை ஏற்கும் வகையில் ஏரிகளும், ஆறுகளும் இருந்திருந்த வகையில் இன்று கடலும் உலக கழிவுகளை ஏற்கும் குப்பைத் தொட்டியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுதோறும் உலகில் 5 மில்லியன் மக்கள் மாசுபட்ட நீரால் ஏற்படும் நோயைச் சந்திக்கின்றனர்.
இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 80 சதவிகித மக்களுக்கு கழிவுநீர் செல்லும் வசதி இல்லை.
மாசடையும் ஆறுகள்
இந்தியாவில் அதிக மக்களின் ஏறக்குறைய 50 கோடி மக்களின் வாழ்வாதாரமாக கங்கை விளங்குகிறது. இதில் நிமிடத்தில் கலக்கும் மலக்கழிவு 11 இலட்சம் லிட்டர், ஆண்டில் எரிக்கப்படும் பிணங்கள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஆகும்.சாம்பல் 15 ஆயிரம் டன்கள் ஆகும்.
சென்னை, பழவேற்காடு ஏரியில் தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் கலப்பதால் அங்குள்ள பறவைகள் சரணாலயமாக இருக்கும் இது மாசடைந்துள்ளது.
கடல்
ஆறுகளில் கலக்கும் கழிவு பொருட்கள் அத்தனையும் இறுதியில் கடலுக்கே சென்றடைகின்றன. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
2011-ல் நிகழ்ந்த புயலால் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமி காரணமாக புகுஷிமா அணுஉலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அணுக்கழிவு கடலில் கலந்துள்ளதால் அதிகமாக கடல் உயிரினங்கள் பாதிக்கப்பட்டன. கதிர்வீச்சும் இன்னும் குறையவில்லை என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசு:
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக காற்று மிகவும் மாசடைந்துள்ளது.இதுவே அமிழ மழை பொழிய காரணமாகிறது இது உலகெங்கும் நிகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் வருவதற்கான காரணம் இக்காற்று மாசடைதலால் வருகிறது. பெருநகரங்கள் அனைத்தும் காற்று மாசுபாட்டின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டன.
ஓசோனை அழிக்கும் தன்மை கொண்ட வாயு குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளிவரும் குளோரோ ஃபுளுரோ கார்பனுக்கு உண்டு. ஆனால் வீட்டுக்கு வீடு குளிர்சாதன பெட்டி இருக்கிறது.
அதிகளவில் சல்பர்-டை-ஆக்ஸைடு வாயுவை சீனா வெளியேற்றுகிறது.
சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் தன்மை கொண்டது ஒசோன் படலம்.
ஒசோன் சிதைவதால் மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பசுமை இல்ல வாயுக்கள்:
கார்பன் -டை- ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள்.
இவ்வனைத்து வாயுக்களும் அளவில் அதிகமானால் பூமியில் வெப்பநிலை அதிகரிக்கின்றன. இதுவே பசுமை இல்ல விளைவு ஆகும்.
2010 நிலவரப்படி இதில் இந்தியாவின் பங்கு 4.7 சதவிகிதம் ஆகும்.
சுற்றுச்சூழல் விளைவுகளை குறைக்க உயிரி எரிபொருட்களை உபயோகிக்க வேண்டும். , இயற்கையை பேண வேண்டும். ஆனால் நாம் அனைவரும் இதை உணர்ந்தாலும் நம் சமூக கடமையை யாரும் நிறைவேற்றுவதில்லை. மக்கள் தங்கள் சந்ததிக்கு நல்ல காற்றையும், நல்ல குடிநீரையும், நஞ்சில்லா விவசாயத்தினையும் கொடையாக கொடுக்கவேண்டும் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் கொடுத்த இந்நிலம், நீர் காற்று என அனைத்தும் மாசடைந்துவருகிறது. எனவே நாங்கள் இயற்கையை காப்பாற்ற ஒவ்வொரு ஊரைச்சுற்றியும் மழைக்காடுகளை உருவாக்குவது அவசியம்.
செல்வமுரளி