Skip to content

இந்திய அரசின் ரப்பர் வாரியம்

     இந்தியாவில் ரப்பர்வாரியம் 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் தொழிலை மேம்படுத்த ரப்பர் பற்றி ஆராய்ச்சி, பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனை வழங்கிட, மார்கெட்டிங் செய்ய , தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.

     தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் ரப்பர் கிடைக்கிறது. ஆனால் அருகில் உள்ள கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92% கிடைக்கிறது. எனவே தமிழக ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து ரப்பரை வாங்குகின்றனர். 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 7.20 லட்சம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

     ரப்பர் வாரியம் ரப்பர் மரம் நடுவதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உதவிகள் செய்கிறது. ரப்பர் அறுவடை செய்ய நவீன பயிற்சி, ஷீட் ரப்பராக மாற்ற பயிற்சி, தரம் பிரிக்க பயிற்சி இன்ஸ்டிடியூட் எனும் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. தேசிய ரப்பர் மாநாடு நடத்துதல், தர மேம்பாட்டுக்கு நடவடிக்கை, தொழில்நுட்ப உதவி, ஊழியர்களுக்கு உதவ திட்டம், ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், மார்கெட்டிங்/ ஏற்றுமதி செய்ய உதவிகள், விலை நிர்ணயம் என பல்வேறு உதவிகளை ரப்பர் வாரியம் செய்கிறது.

     ரப்பர் பயிர் மேம்பாட்டுத் திட்டம் VI, ரப்பர் பயிர் மேம்பாட்டுத் திட்டம்VII என இரு புதிய திட்டங்கள் மூலம் பல நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் ரப்பர் மரங்களை நட்டு வளர்க்கலாம். தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மேடான குளிர்ந்த பகுதிகளிலும் வளர்க்கலாம். அதற்கு ரப்பர் வாரிய உதவிகளைப் பயன்படுத்தலாம். ரப்பர் வாங்கி விற்கும் வணிகர்கள் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறலாம்.

     22 வகை நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ரப்பர் வாரியம், ரப்பர் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை கொண்டு பயிற்சிகள் தருகின்றன. பல பத்திரிக்கை புத்தகங்களை வெளியிடுகிறது.

     ரப்பர் பயிற்சி இன்ஸ்டிடியூட்டை கோட்டயத்தில் இவ்வாரியம் நடத்தி வருகிறது. ரப்பர் பயிரிடுதல், தொழில் வளர்ச்சி விரிவாக்கப் பணிகள், ஊழியர்களின் திறன் மேம்பாடு என 4 பிரிவாகப் பிரிந்து பயிற்சி அளிக்கின்றனர். விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், கூட்டுறவு சங்கத்தினர், பொருட்கள் தயாரிப்போர், தொழில் முனைவோர், வணிகர்கள், ரப்பர் வாங்கி விற்கும் டீலர்கள்இவர்களுக்கெல்லாம் பயிற்சி ஆலோசனை இங்கு காத்திருக்கிறது. இத்துறையில் ஈடுபட விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Rubber Training Institute,

Govt.of India, Kottayam-9, Kerala.

Ph: 0491- 2353127,

Etrating@rubberboard.org.in

பிராந்திய அலுவலகம்:

துணை இயக்குனர், ரப்பர் வாரியம்,

3/33C, இரண்டாவது மாடி, மெயின்ரோடு,

மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம்– 629165

போன்: 04651-273949

Thanks to MANVAASANAI

Leave a Reply

editor news

editor news