Skip to content

அலங்கார மீன் வளர்ப்பு

நோக்கம்: வணிக நோக்கிலான வேளாண்மையின் முக்கிய அங்கமான அலங்கார மீன் வளர்ப்பு பற்றி அறிதல்

அலங்கார மீன் வளர்ப்பு:

பல்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறிய இரக மீன்களை தொட்டிகள் அல்லது கண்ணாடிக் கலன்களில் வளர்ப்பதே அலங்கார மீன் வளர்ப்பாகும். இது வீடு, அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் அழகு மற்றும் மன அமைதிக்காக வளர்க்கப்படுகிறது.

ஏற்ற மீன் இனங்கள்: பார்ப்ஸ், ரேஸ் போராஸ், பொன்மீன், டெட்ராஸ், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல் மீன், கோரமிஸ், கப்பி, கருப்பு மோலி, கத்திவால், பிளாட்டி, கோமெட், ஒரண்டா, ரெட்கேப், வொய்ட்டெய்ல், பழன் ஐ, பீட்டாஸ், ஸ்பிலெண்டர், கோர்னி, ஸீப்ரா போன்ற இனங்கள் அலங்கார மீன் வளர்ப்புக்கு ஏற்றவையாகும். அலங்கார மீன்கள் அவற்றின் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து முட்டையிடுபவை மற்றும் குட்டி போடுபவை என இருவகைப்படும்.

மீன் உணவு: மொய்னா, டாப்னியா, டியூபெக்ஸ் புழுக்கள், இரத்தப்புழுக்கள், கொசுப்புழுக்கள், வேக வைத்த கோழி ஈரல், பிண்ணாக்கு, தவிடு, மீன் தூள் கலவை ஆகியவற்றை உணவாகக் கொடுக்கலாம்.

இனப்பெருக்கம்: 25-280 செ வெப்பநிலை உகந்தது. ஆண் பெண் விகிதம் 2:1 அல்லது 3:1 என்ற அளவில் பராமரிக்க வேண்டும். உள்பொரி மீன் வகை (குட்டி போடுபவை). தனது குட்டிகளையே உணவாக உட்கொள்ளும் தன்மை உடையதால் குட்டி போட்டவுடன் தாய் மீன்களை வேறு தொட்டிக்கு மாற்ற வேண்டும். சிறிய மீன்களுக்கு நுண்ணுயிரிகளை முதலில் அளித்து பின்னர் விலங்கு மிதவை உயிரிகளை கொடுக்க வேண்டும்.

(அலங்கார வண்ண மீன் விற்பனையகத்திற்கு சென்று மீன் வகைகளையும், வளர்ப்பு முறையையும் கண்டறிதல்).

Leave a Reply

editor news

editor news