Skip to content

ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!

சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும்.

உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இதில் முதல் நிலையில் இருப்பது ஸ்பைருலினா எனப்படும் இந்த சுருள்பாசியே.

கி.பி.1965ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமாலியா மக்களைப் போல மெலிந்து போயினர். இருந்தபோதிலும், சார்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் (மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும், அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்கவில்லை; வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்தி ருந்தனர். இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் ஆய்வுமுடிவுப்படி, சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரியவந்தது. அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா. சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக் கிறது
80%
ஆல்கலினும், 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு. பழங்கள், காய்கறிகள், பாசிகள் போன்றவை. 20% அமில உணவு. இறைச்சி, கடல் உணவுகள், கோதுமை போன்றவை. ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.

இந்தியாவில் ஸ்பைருலினா அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இருந்தபோதிலும் கடந்த 5 ஆண்டு காலமாகத்தான் இந்த பாசி வளர்ப்பு பரவலாக தெரிய வந்துள்ளது.

ஸ்பைருலினாவில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,,கே, அமினோ ஆசிட், காமோலினா லிங்க் அமிலம், புரதம் (55% முதல் 65% வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6, பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு, டிஸ்மியூட்டேஸ் (SOD) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.

பயன்கள்:

  • மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து தயாரிப்பில் முக்கியமாக இந்த பாசி பயன்படுகிறது.
  • அழகு சாதன பொருட்கள் தயாரிக்க, மீன்களின் வளர்ச்சியை அதிகபடுத்தும் உணவாக, மாடுகளை அதிக அளவில் பால் கறக்கச் செய்யும் தீவனமாக, பட்டுப்புழுவின் தரத்தை அதிகரிக்கும் வகையில் பட்டுப் புழுவுக்கு உணவாக, ‘கொழுகொழுவென கோழிகள் வளர்வதற்கு என்று ஸ்பைருலினா பாசியின் பயன்பாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
  • இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.
  • தாதுக்கள்:

    இவற்றில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளது. உடலை சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

  • மக்னீசியம்:

    ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புகளாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.

  • வைட்டமின் ஏ:

    கண்பார்வை சீராக இருப்பதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது அத்தியாவசியமானது. பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் இச்சத்து அதிகளவில் உள்ளது.

  • பீட்டாகரோட்டின்:

    இது கேரட்டில் இருந்து கிடைக்கக்கூடிய அளவைவிட ஸ்பைருலினாவில் இருந்து 10 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

  • வைட்டமின் பி6 – பி12:

    ஸ்பைருலினாவில் இவை மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரின் கணையம் சீராக செயல்பட்டு இன்சுலினை தேவையான அளவு சுரக்கச் செய்து இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

  • இரும்புச்சத்து:

    மற்ற உணவுப் பொருட்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.

  • கார்போஹைட்ரேட்:

    நேரடியாக ஸ்பைருலினாவிலிருந்து நமது உடலுக்கு கிடைக்கிறது.

  • காமா லினோலினிக் அமிலம்:

    இவை ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாக கிடைப்பதால், உடலில் கொழுப்புச்சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனை குறைக்கின்றது. ஸ்பைருலினாவில் காமா லினோலினிக் அமிலம் இருப்பதால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவாக அமைகிறது.

  • சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ்:

    உடலில் இறந்த செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவல்லது. எனவே புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை தீர்க்கவல்லது.

  • உடல் சுத்தமாகும்:

    ஸ்பைருலினாவில் பச்சையம் அதிகளவில் உள்ளது. இது உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

  • நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்:

    உடலில் இருந்து டாக்சின்கள் வெளியேறி விட்டால் தானாக நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். இதனால், உடலைத் தாக்கும் கிருமிகளிடமிருந்து உடல் பாதுகாப்புடனும்,ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

  • நீரிழிவு:

    நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் ஸ்பைருலினாவை சாப்பிட்டு வந்தால் 6 வாரங்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் மற்றும் பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

  • புத்துணர்ச்சி அளிக்கும்:

    ஸ்பைருலினாவை தினமும் உட்கொண்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடலின் கலோரி அளவு குறைந்து உடல் எடை வேகமாக குறையும்.

  • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்து

ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் போஸ்டன் (1996 1998) ஸ்பைருலினா தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவில் ஹெச் ..வி. வைரஸ் மேலும் மேலும் பெருக்கமடையாமல் தடுப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிகள் அதிக நாட்களுக்கு உயிர் வாழ உதவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

5 thoughts on “ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!”

  1. தமிழ்நாட்டில்,திருப்பூர் மாவட்டத்தில் எங்களுக்கு கிடைக்கும்மா

Leave a Reply

editor news

editor news