1930-ம் ஆண்டு ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிமுறையில் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12-வது அகிலஉலக தாவரவியல் கூட்டம் ஜீலை 1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் (International code of botanical nomenclature -ICBN)1978 முதல் நடைமுறைக்கு வந்தது.
அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டத்தின் சில முக்கிய அம்சங்களாவன:
1.பேரினப்பெயர் ஒற்றை பெயர்ச்சொல்லாகும். ஆங்கிலத்தில் எழுதும் போது, பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். சிற்றினப்பெயர் ஒரு பண்புச்சொல்லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும்.இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். எ.கா.ஒரைசா சட்டைவா மற்றும் ஒல்டன்லேண்டியா ஆல்போ- நெர்வியா.
2.பெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கச் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
3.இருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாக அச்சிட வேண்டும். அல்லது அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். எ.கா. அபுட்டிலான் நீல்கிரியன்ஸ் அல்லது அபுட்டிலான் நீல்கீரியன்ஸ்
4.ஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் ஹெர்பேரியம் தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஹெர்பேரிய நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர் தாவரமாதிரி(Type specimen)எனப்படும். இது ஹெர்பேரியத் தாளில் சேகரிக்கப்படவேண்டும்.
5.எந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தில் விளக்கத்தை அளிக்கிறாரோ அல்லது தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டுகிறாரோ, அந்நபர் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன் முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு ஆசிரியர் பெயர் குறித்தல் என்று பெயர். லின்னேயஸ் என்ற பெயர் லி. அல்லது லின். எனவும், ராபர்ட் பிரெளன் என்ற பெயர் ரா.பி எனவும், சர் ஜோசப் டால்டன் ஹிக்கர் என்ற பெயர் ஹீக். எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும். எ.கா. மால்வா சில்வெஸ்ட்ரிஸ் லின்.
- பெயர் சூட்டப்பட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம் இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கு வேண்டும்.
7.தவறான மூலத்திலிருந்து ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name)எனக் கருதப்படும். இது நாமென் ஆம்பிகுவம் (Nomen ambiguum)என்றும் அழைக்கப்படும். இத்தகைய பெயர் உபயோகத்திலிருந்து முழுமையாக நிராகரிக்கப்படும்.
- ஒரு தாவரத்தின் பேரினச்சொல்லும், சிற்றினச் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனிம் (Tautonym)எனப்படும். எ.கா. சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ். பெயர் சூட்டு முறையில் இது போன்ற பெயர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.