வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம் காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் வேளாண் பட்டதாரி ராஜேஸ். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கத்தில் இளங்கலை வேளாண்மை முடித்து பேற்படிப்பை அங்கேயே வேளாண் நுண்ணுயிரியல் துறையில் முடித்துள்ளார். இவரது ஊர் தருமபுரி அடுத்துள்ள புலிகரை ஆகும். காளாண் வளர்ப்பில் அவர் பெற்ற அனுபவங்களை கூறும்பொழுது….
நான் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு காளான் வளர்ப்பில் ஈடுபட்டேன். எனக்கு வேளாண்மையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. அதற்கு நான் முதலில் தேர்ந்தெடுத்த வழி காளான் வளர்ப்பு. நான் காளான் வித்துக்களை பெங்களூரில் உள்ள IIHRல் வாங்கினேன். சிப்பிக்காளானை வளர்க்க சிறந்த சிப்பிக்காளான் வித்துக்களை வாங்க வேண்டும்.
*காளான் குடில் தயார் செய்யும் முறை*
முதலில் நன்கு கூறைவேய்ந்த குடிலை தாயார் செய்தல் வேண்டும். பின் குடிலின் உள்பக்கம் முழுவதும் சன்னல் பையினை கட்டிவிட வேண்டும். பின் ஒரு நாளைக்கு மூன்று முறை அந்த சன்னல்பையினைச் சுற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும். குடிலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிலின் வெப்பம் எப்பொழுதும் 20°C முதல் 23°Cக்குள் இருக்க வேண்டும்.
*காளான் படுக்கை தயார் செய்தல்*
முதலில் காளான் வளர்க்க 45×30Cm அளவு கொண்ட பாலித்தீன் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நன்கு துண்டாக நறுக்கி 3 மணி நேரம் தண்ணீரில் ஊர வைத்து 2மணி நேரம் கொதிக்க வைத்து பின் ஆர வைத்த வைக்கோலை 5Cm உயரத்திற்கு பரப்ப வேண்டும். அப்பொழுது வைக்கோலின் ஈரப்பதம் சரியாக 65% இருக்க வேண்டும். அதன் மேல் காளான் வித்துக்களை தூவ வேண்டும். பின் மீண்டும் 5Cm உயரத்திற்கு வைக்கோலை பரப்ப வேண்டும். இவ்வாறு ஒரு பாலித்தீன் பையில் 6 அடுக்குவரை காளான் வித்துக்களை போடலாம். பின் அந்த பாலித்தீன் பையில் 15 முதல் 20 இடங்களில் ஓட்டை போட வேண்டும். ஒரு விதை புட்டியில் இருந்து இரண்டு காளான் படுக்கைகள் தயாரிக்களாம். காளான் குடிலை நன்கு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காளான் படுக்கைகளை கட்டுவதற்கு முன்பு டெட்டால் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனைட்டை வைத்து குடிலை நன்கு சுத்தம் செய்தல் வேண்டும். பின் உரிகட்டி காளான் படுக்கைகளை இரண்டு மூன்று அடுக்குகளாக தொங்க விடலாம். படுக்கைகளுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும்.
*பராமரிப்பு*
ஒரு நாளைக்கு மூன்றுமுறை சன்னல் பைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏதேனும் ஒரு படுக்கையில் நோய் வந்தாலும் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 20 முதல் 25 நாட்களுக்குள் காளான் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு படுக்கையில் 3 முறை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 50 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.
*சந்தை வாய்ப்பு*
உழவர் சந்தையில் விற்கலாம். என்னிடம் அக்கம்பக்கம் இருப்பவர்ளே வந்து வாங்கிக்கொள்கிறார்கள். 200கிராம் எடைகொண்ட ஒரு பாக்கெட்டை 25 ரூபாய்க்கு விற்கிறேன். முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு போடு ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தேன் என்று கூறினார் மகிழ்ச்சியாக.
விவசாயிகளுக்கான காளான் வளர்ப்பு பயிற்சியில் ராஜேஷ்.