மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியை கையிலெடுத்தார்.
2014 இல்இவர் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைகுடிலில் வெள்ளரிசாகுபடியை ஆரம்பித்தார்.பசுமைகுடில் அமைக்க ஆன செலவு14 இலட்சம். இவர் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறைமானியமாக 4 இலட்சம் பெற்றுள்ளார், நான்கு மாத பயிரானவெள்ளரியில் இவர் மல்டிஸ்டார்(MULTISTAR)இரகத்தினைபயிரிட்டுள்ளார் மற்ற விவசாயிகளை போல் இல்லாமல் பல வித்தியாசமான முறைகளை கையாண்டு நல்ல விளைச்சலைபெற்றுவருகிறார். நாற்றங்கால்அமைப்பதிலேயே இவர் பேப்பர்கப்களை பயன்படுத்திநாற்றுகளை உற்பத்தி செய்கிறார்,இதனால் தரமான நாற்றுகள்கிடைப்பதோடு நல்ல விளைச்சலயும் தருகிறது. மேலும் முதல் பருவத்தில் இரட்டை நாற்று முறையில் நடவு செய்து (4000செடிகள்) சுமார் 8 – 12 டன் விளைச்சல் எடுத்துள்ளார், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தில்செடிகளின் எண்ணிகையை குறைத்து ஒற்றை வரிசை நடவு முறையில் (2000 செடிகள்)நடவுசெய்து20டன்விளைச்சலைஎடுத்துள்ளார்.
இவர்தற்போது மார்க்கெட் நிலவரம் அறிந்துFAKON STAR புதியராகத்தினை பகுதியாக பயிரிட்டுள்ளார். தற்போது இயற்கை விவசயதிற்கு மாறிவரும் இவர் பஞ்சகவ்யா, தசகாவ்யா, முட்டைகரைசல் மற்றும் ஜீவாமிர்தம் முதலியவற்றை தனது தோட்டத்திலேயேஉற்பத்தி செய்து பயிர்களுக்குதெளித்துவருகிறார்,இயற்கைமுறையில் இடுபொருள் செலவுகுறைவதாகவும் கூறுகிறார்வரும்2018ம்ஆண்டிற்குள் தனது பண்ணையில் பசுமைக்குடில், மண்ணில்லா விவசாயம் மற்றும் நீர்வழி விவசாயம் போன்றவற்றின் மாதிரிகளை அமைத்து விவசாயமாணவர்களுக்கும்,விவசாயிகளுக்கும் ஒருபயிற்சி பண்ணை அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார். இவரது பண்ணையை இதுவரை 400க்கும் மேற்பட்ட மாணவர்களும் விவசாயிகளும் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு ராம்குமார் -9843278872.
G.சுதாகர்
விழுது மாணவ பத்திரிகையாளர்
முதுநிலை(காய்கறியியல்)
Kathirgai