Site icon Vivasayam | விவசாயம்

மொந்தன் வாழை …

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்  முதல் தலைமுறை விவசாயிகள், இளம்விவசாயிகளில்  பலர் ,விவசாயித்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி  பெரும்பாலான இயற்க்கை விவசாயிகள் ,ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்க்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்க்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்க்கைமுறையில்  மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார்.

ஒரு காலைப்பொழுதில் கள்ளக்குறிச்சியில் உள்ள வாழைத்தோட்டத்தில் வாழை இலைகளைப் பறித்துக்கொண்டிருந்த பாலசுபரமணியனைச் சந்தித்தோம் .”தத்தா, அப்பாக் காலங்கள்ல இருந்து விவசாயம்தான் செஞ்சுட்டு இருந்தாங்க. அப்பாவுக்கு ரசாயன உரங்களால  வர்றபாதிப்பெல்லாம் தெரியாது .உரம் போட்டா விலைச்சல் கிடைக்கும்ங்குற ஆசையிலதான் செய்துகிட்டிருந்தார் .நான் பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன் .ஆரம்பத்துல நானும் ரசாயன உரங்களைத்தான் போட்டேன். ஒருமுறை புச்சிக்கொல்லி அடிக்கிறப்போ,அது எனக்கு பாதிப்பை உண்டு பண்ணிட்டுச்சு .அதனலதான் இயற்க்கைக்கு மாறணும்னு முடிவு பண்ணினேன். பத்து வருஷமா முழு இயற்கைக்கு வந்த கதையைச் சொன்ன பாலசுப்பிரமணியன் தொடர்ந்தார்.

       களைகளைக் கட்டுப்படுத்தும் சாம்பல் !

”மொத்தம் ரெண்டே முக்கால் ஏக்கர் நிலம் இருக்கு .கரிசல் மண்  நிலம் .பாசனத்துக்கு கிணறு இருக்கு .ஆரம்பத்துல நெல்,எண்ணெய்பனை எல்லாம் இயற்கை முறையில சாகுப்படி செஞ்சேன் .ஆன அதுல கிடைச்ச வருமானம் போதுமானதா இல்ல அப்போ, சில விவசாயிகள்ட்ட பேசுனப்போ, ’மொந்தன்  வாழை சாகுபடி செஞ்சா தார், இலைகள்  மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்’னு சொன்னாங்க. உடனே, 1ஏக்கர் 60 சென்டு நிலத்துல மொந்தன் வாழை சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன்.நட்டதும் முதல்ல களைப்  பிரச்சனை வந்தது.ரைஸ் மிள்கல கிடைக்கிற சாம்பலைத் தோப்பு முழுவதும் அரையடி உயரத்துக்குப் பரப்பிவிட்டதும் ,களைப் பிரச்சனை குறைஞ்சுடுச்சு. ஸ்ப்ரிங்க்ளர் மூலமாத்தான் தண்ணி பாய்ச்சுறேன்.

     6அடி இடைவெளியில் நடவு !

ஒரு ஏக்கர் நிலத்தில் மொந்தன் வாழை சாகுபடி குறித்து பாலசுப்பிரமணியன் சொன்ன தகவல்கள் இங்கே ……

    வாழைக்கு வடிக்கால் வசதியுள்ள நிலம் அவசியம் .அனைத்து வகை மண்ணிலும் வாழை வளரும்.தேர்வு செய்த ஒரு ஏக்கர்  நிலத்தை தக்கைப்பூண்டு விதைத்து,பூ எடுக்கும் சமையத்தில் மடக்கி உழ வேண்டும். தொடர்ந்து 5டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி ஒரு சால் உழவு செய்ய வேண்டும் பிறகு, 6 அடி இடைவெளியில்  ஒரு அடி ஆழத்துக்குக் குழி எடுத்து  2 நாட்கள் காயவிடவேண்டும் .ஸ்பிரிங்கள்ர் மூலம் பாசன வசதியை அமைத்துக்கொண்டு ஒவ்வொரு குழியிலும் இரண்டு கைபிடி எருவைக் கொட்டி, விதைக்கிழங்குளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொர்ந்து மாதம் ஒருமுறை பாசன நீருடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக்  கரைசலைக் கலந்து விடவேண்டும். வேறு எந்த கரைசலைக் கலந்துவிட வேண்டம் வேறு எந்த பாரமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய்கள்  வருவதில்லை. பூச்சிகள் தக்கினால், வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.

   அதனால, வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்தாலே போதுமானதா இருக்கு இப்போ வாழை நாட்டு ஏழு மாசம் ஆச்சு” என்ற பாலசுப்பிரமணியன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

   1 இலை 3 ரூபாய்!

1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தில 1,900 வாழைக்கிழங்குகளை நாடவு செஞ்சேன். இதுல 400 கனுங்க சரியா வளரலை. மீதிக்கனுங்க அருமையான வளர்ந்திருச்சி. இந்த வாழை மரங்களல் மூணு மாசத்துல இருந்தே இலைகளை அறுவடை செஞ்சுட்டிருக்கேன். மாசத்துல ரெண்டுமுறை அறுவடை செய்றேன் சின்ன இலைக்கு2 ரூபாயும், பெரிய  இலைக்கு 3 ரூபாயும்  விலை கிடைக்கும். ஒவ்வொரு முறை இலைகளை அறுத்து விற்பனைக்கு அனுப்புற போதும் சராசரியா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அந்த வகையில 1,500 மரங்கள்ல இருந்து மாசம் 10 ஆயிரம் ரூபாய் கிடைச்சுட்டிருக்கு.

தரமான விதைக்கிழங்கு அவசியம்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத நிலத்தில் இருந்து, இரண்டு மாத வயதுள்ள கன்றுகளை விதைக் கிழங்குக்குத் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து விதைக்கிழங்குகளும்  ஏறத்தாழ ஒரே அளவில் இருக்க வேண்டும்

 

நன்றி!
பசுமை விகடன்

 

 

Exit mobile version