உலகத்தில் உள்ள சாமானியர் முதற்கொண்டு பெரிய முதலாளிகள் வீடு வரை இன்று அனைவர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி வந்துவிட்டது. இதனால் அதிகப்படியான மின்சார நுகர்வும் ஏற்படுகிறது, தமிழகத்தில் நாள்தோறும் மின்சார நுகர்வு அதிகமாகும் நிலையில் நாம் சற்றே மின்சார சேமிப்பினை தேடி பயணிப்பதும் சால சிறந்தது. ஏனெனில் நாம் மின்சார சேமிப்பினை முறையாக முறைப்படுத்தாவிடில் அதிகமாகும் மின்சார தேவையின் காரணமாக நிச்சயம் அதிவேக அணு உலைகளை ஏற்படுத்திவிடுவார்கள் நமது ஆட்சியாளர்கள். எனவே நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மின்சார சேமிப்பினை நோக்கி பயணிப்பது அவசியம்.மாற்றங்களை நம்மில் இருந்து ஆரம்பிப்போம்!
சரி நம் விசயத்திற்கு வருவோம்
குளிர் சாதனப்பெடடி எளிய (இயற்கை?) முறையில் நாம் ஒன்றினை செய்து பார்ப்போமா?.
இரண்டு பாத்திரங்கள் எடுத்துக் கொள்ளவும், பெரியது ஒன்று சிறியது ஒன்று. ஒன்றுக்குள் மற்றொன்றை வைக்கவும். இரண்டு பாத்திரங்களுக்கு நடுவில் இருக்கும் இடை வெளியில் மணல் நிரப்பி வைத்து, உள்ளிருக்கும் பாத்திரத்தில் காய்கள், பழங்கள் பால் போன்றவற்றை வைத்து விடவும்…பின்பு நிரப்பி வைத்திருக்கும் மணலில் தண்ணீர் ஊற்றி மூடி விட்டால், நம் குளிர்சாதனப் பெட்டி தயார். மட்பாண்டங்கள் உபயோகித்தால் அதைச் செய்பவருக்கு உதவியது போல் ஆகும்.
இது மட்டுமா இன்னும் வேறு பல முறைகளும் இருக்கிறது. அவற்றை வரும் நாட்களில் பார்ப்போம்.
நீங்களும் இதுபோன்ற எளிதாகன முறைகளை எழுதலாம்
அபி, மஸ்கட்
super bro
super