Skip to content

திராட்சை சாகுபடி!

தமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ணநிலையை தமிழகத்திலேயே தேனியில் மட்டும்தான் காணமுடியும். இங்கு திராட்சை அதிகளவு பயிரிட்ப்படுவதைத் தொடர்ந்து அதை ஊக்குவிக்கும் வகையில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் 120 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

  தமிழகத்தில் 2800 ஹெக்டேரில் கோவை, திண்டுக்கல், தெனி திருநெல்வேலி மாவட்டங்களில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டாலும் தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.

  தேனியில் கம்பம், காமயகவுண்டன்பட்டி, காருப்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, சின்னமனூர், வெள்ளையம்மா புரம், நாராயணத்தேவன்பட்டி, கோகிலாபுரம் ஆகிய ஊர்கள் திராட்சை விவசாயத்தில் முன்னணியில் உள்ளன. திராட்சை விவசாயத்தில் ஒரு வருடத்தில் 3 முறை அறுவடை செய்யக்கூடிய பருவம் இந்தியாவிலேயே இங்குதான் நிலவுகிறது.

          திராட்சை விவசாயம் செய்வது எப்படி?

  நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலமாக இருந்தால் நல்லது.

  0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர்இடைவெளியில் குழிதோண்ட் வேண்டும். இது பன்னீர் ரகங்களுக்கு ஏற்றது. மற்ற ரகங்களாக இருந்தால் 1*1*1 மீட்டர் அளவுகள் குழிகளாக எடுக்க வேண்டும்.

 நன்கு மக்கிய தொழௌரம், அல்லது பசுந்தழை உரம் அல்லது குப்பைகளைக் கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். பின்பு ஜீன், ஜீலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். பன்னீர் திராட்சையாக இருந்தால் 3*2 மீட்டர் இடைவெளியும் 4*3 மீட்டர் இடைவெளியும் விடவேண்டும்.

 செடிகள் நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக மூன்றாவது நாள் தண்ணீர் காட்டவேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நீர் காட்ட வேண்டும்.

 ஆனால் கவாத்து செய்ய வேண்டும் என்றாலும், அறுவடை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு 15 நாட்களுக்கு முன் நீ பாய்ச்சுவதை நிறுத்திவிட வேடும்.

கொடி வளர்ப்பும் கவாத்துக்

  நடவு செய்த செடி வளர வளர அதை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும். பின்னர் நுனியைக் கிள்ளி விடவேண்டும். பக்கக் கிளைகளை எதிரெதிர் திசைகளில் பரவவிடவேண்டும். அதம் கிளைகளையும் மேலும் மேலும் கிள்ளிவிட்டு, திராட்சைக் கொடியை பந்தல் முழவதும் படரச் செய்ய வேண்டும்.

  பொதுவாக நான்கு மொட்டு என்ற நிலையில் கவாத்து செய்வார்கள். அது எந்த ரக திராட்சை என்பதைப் பொறுத்து இரண்டு மொட்டு நிலையிலும் கவாத்து செய்வது உண்டு. அதேபோல், கோடைக்காலப் பயிராக இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரியிலும், மழைக்காலப் பயிராக இருந்தால் மே அல்லது ஜீனில் கவாத்து செய்ய வேண்டும். தொழஉரம், பசுந்தாழ் உரம், தழைச்சத்து, மணிஅசத்து, சாம்பல் சத்து போன்ற உரங்களை ரகங்களுக்கு ஏற்ப இடவேண்டும்.

  முக்கியமாக கவனிக்க வேண்டியது, பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர வகைசெய்ய வேண்டும். அதற்க்கு நுனியை அவ்வபோது வெட்டி விடுவது அவசியம். தாய்க் கொடியையும் பக்கவாட்டில் வளரும் கொடிகளின் நுனியையும் 12 முதல் 15 மொட்டுகள் விட்டே வெட்ட வேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ள கொடியாக இருந்தால், அதனை பந்தல் உடன் சேர்த்து கட்டவேண்டும்.

  வண்டுகள், இலைப் பேன்கள், மாவு பூச்சுகள் தண்டு துளைப்பான்கள் போன்ற பூச்சுகளை கட்டுப்படுத்த இயற்க்கை முறை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருந்தால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய ஆய்வாளர்கள் ஆலோசனைப் படி செய்வது நல்லது.

  பழங்கள் சீராகப் பழுக்க 0.2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம்) பழம் விட்ட 20-வது நாளிலும் 40-வது நாளிலும் தெளிக்க வேண்டும்.

  பன்னீர் திராட்சையாக இருந்தால் ஒரு வருடத்திற்க்கு ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். அதுவே பச்சை திராட்சையாக இருந்தால் 40 டன் வரை கிடைக்கும். மற்றபடி விதையில்லாத ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என்றால் முறையே 15, 20 டன் வரை கிடைக்கும். எந்த ரகம் என்றாலும், பருவத்தே பயிர் செய்து, அழகல் நோயிலிருந்து காத்து, அறுவடை செய்தால், திராட்சையில் கிடைக்கும் லாபம் அதிகம்தான். ஒரு ஏக்கரில் 120 நாளில் 3 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் தேனிப்பகுதி விவசாயிகள்.

1 thought on “திராட்சை சாகுபடி!”

  1. எனக்கு திராட்சை செடிகள் வளர்க்க பிடிக்கும். நான் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் திராட்சை செடி வளர்க்க ஆசைப்படுகிறேன் ஆனால் திராட்சை செடி கிடைக்கும் இடம் எனக்கு தெரியவில்லை தயவுசெய்து திராட்சை செடிகள் இருந்தால் அனுப்பவும்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj