நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
-திருவள்ளுவர்.
நீர் மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம் மிக வேகமாக தண்ணீர் குறைந்து வரும் நிலையில் சொட்டு நீர் பாசனம் எதிர்கால உலகிலற்கு உணவளிக்க இன்றைய விவாசயத்திற்கு முக்கியமாகும்..
தென்னிந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுஆழத்திற்கு சென்றுவிட்டது.மேலும் 60 மாவட்டங்களின் நீர்வளம் அபாயகரமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தண்ணீர் மேலாண்மை அவசியமாகிறது… எனவே விவசாயிகள் அனைவரும் தண்ணீர் மேலாண்மையை மேற்கொள்ளுவது அவசியமாகிறது.
சொட்டு நீர்ப் பாசனத்தின் வரலாறு மிகப்பழமையானது.பழங்கால சீனாவில் செடிகளுக்கு பக்கத்தில் மண்பானைகளைப் புதைத்து அவைகளில் நீர் நிரப்பிவிட்டால் அந்த நீர் மண்பானையின் நுண்ணிய துவாரங்களில் வழியே கசிந்து செடிகளின் வேர்களுக்கு கிடைக்கும் , இந்த முறையை சீனர்கள் பண்டைய காலத்திலயே பயன்படுத்தியிருக்கிறார்கள்..
‘சிம்ச்சா பிளாக்ஸ்’ என்பவரே சொட்டு நீர்ப்பாசன முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்..இவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.அவர் கண்டுப்பிடிப்பதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் நாட்டின் நீர்ப்பற்றாக்குறை இஸ்ரேல் அடிப்படையில் ஒரு பாலைவானம் .வடக்குப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் இருந்துதான் அந்த நாட்டிற்கு தேவையான நீர் முழுவதையும் கொண்டு வருகிறார்கள் ..அங்கு நீர் ஒருமதிப்பு மிக்க பொருள்.ஆகவே அதை சிக்கனமாகவும் அதிக பயனுள்ளாதாகவும் பயன்படுத்த ஒரு வழி கிடைத்தவுடன் அதை எல்லாரும் வரவேற்றனர்..இதன் முக்கியதுவத்தை உணர்ந்த இஸ்ரேல் அரசே இந்த முறையைக் கட்டாயாமாக்கியது..இஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசனமுறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“சொட்டு நீர்ப்பாசனத்தின் முன்னோடியாக இஸ்ரேல் நாடு!”
நீராதாரம் குறைந்து வந்தாலும்,சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பைப் பெருக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கிடைக்கும் நீரைக் கொண்டு வேளாண்மையை நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர்
இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர்ப் பாசனத்திட்டமாகும்.(சொட்டு நீர்ப்பாசனத் திட்டம்). தற்போது இந்த திட்டம் வளர்ந்து வரும் நாடுகளிலும் குறிப்பாக நம் இந்தியா போன்ற நாடுகளிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது…
சொட்டு நீர்ப்பாசனமுறை என்பது முதன்மைக்குழாய், துனணக்குழாய் மற்றும் பக்கவாட்டுக்குழாய் மூலமாக பயி்ர்களுக்கு தேவையான நீரை அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும் முறையே சொட்டு நீர்ப் பாசனம்.
வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அதன் வேர்ப்பகுதியில் நேராக அளந்து அளிக்கிறது.அதனால் பயிர் இன்னும்வெகுவிரைவாக வளர்ந்து நல்ல மகசூலைத் தருகிறது.
சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் விவாசாயிகள் அடைய பெறும் நன்மைகள்..
தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஏற்றது..
இதில் தண்ணீரானது மெதுவாக வும் குறைந்த அழுதத்திழும்செடியின் வேர்ப்பகுதியில் நேரடியாக அளிக்கப்படும்…
குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்யலாம்..75%நீரை இப்பாசனத்தின் மூலம் சேகரிக்கலாம்….ஆட்களுக்ககாக ஆகும் செலவும் குறைவு….சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்….தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்..
மகசூலை 150% அதிகப்படுத்தும்..சாதரண பாசனத்தை ஒப்பிடுகையில் 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேகரிக்கலாம்..பயிர் திடமாகவும்,ஆரோக்கியமாகவும் வளர்வதோடு வேகமாகவும் முதிர்ச்சி அடையும்…சீக்கிரம் பயிர் முதிர்ச்சியடைவதால் குறைந்த காலத்தில் முதலீடு கிடைக்கும்…நீரீல் கரையும் உரத்தை குழாய்கள் மூலமாகவும் கொடுக்கலாம்..நீர் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அளிப்பதால் களைகள் வளர்வதைக் குறைக்கலாம்..சொட்டு நீர்ப்பாசனத்தை ஏற்ற இறக்கம் உடைய நிலம்,உப்பு நிலம்,நீர்தேங்கும் நிலம் மற்றும் மலைப்பகுதிகளிலும் பயன்படுத்தலாம்…இந்த பாசன முறையை அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு பெரிதும் பயன்படுத்தலாம்…எ.கா..கரும்பு,பருத்தி,வெண்டைக்காய்,தக்காளி…….இந்த முறையின் மூலம் தண்ணீர் வீணாவதை பெரிதும் தடுக்கலாம்…..
இந்திய அரசின் மானியம்
சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திடஆகும் மொத்தச் செலவுத் தொகையில் ஏறக்குறைய 65% இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியமாக வழங்குகிறது..சொட்டு நீர்ப்பாசனம் செய்ய ஆகும் ஆரம்பச் செலவில் மானியமாக ரூம40000/ ஹெ.ஏ அரசிடம் இருந்து அளிக்கப்படுகிறது..பழப்பயிர்கள்,காய்கறிகள்,தென்னை ,கரும்பு ஆகிய பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது…
தண்ணீரை முறையாகப் பயன்படுத்தி தண்ணீர் பற்றாக்குறையைத் தடுக்கலாம் இந்த முறையின் மூலமாக..
நீரை அளவாக பயன் படுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு வாழ வழி செய்வோம்….
அ.ரோகிணி
இளங்கலை வேளாண் மாணவி
விழுது – வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்
சொட்டுநீர் பாசனம் தொடர்புடைய செய்திகள்
சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்