![](https://www.vivasayam.org/wp-content/uploads/2017/07/kodaiulavavu.jpg)
கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த கோடை உழவு மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்ற.
முதலில் நன்றாக உழவு செய்வதன் மூலம் மண் நன்றாக பொலபொலவென ஆகுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான காற்று கிடைக்கும். மழைநீர் மேலே தேங்கி நிற்காமல் மண்ணிணுள் சென்றுவிடும். இதனால் பயிர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது.மேலும் பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல இது வழி செய்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் வாழையில் வாடல் நெல்லில் துங்ரோ போன்ற நோய்களை ஏற்படுத்தும் மண்ணில் உள்ள கிருமிகள் இறந்துவிடும். மேலும் பூச்சிகளின் முட்டைகளும் லார்வாக்களும் இறந்துவிடும். நிலத்தில் உள்ள களைச்செடிகளைஅகற்றுவதில் கோடை உழவு பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் மழையில் சிறுதனியன்கள் பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
எனவே விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயம் பெறுமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்… ..
எ.செந்தமிழ்,
வேளாண் இளங்கலை மாணவர்,
விழுது – வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்