ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்களில் ஒருவரான கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். சோமசுத்தரத்தின் அனுபவங்களை கடந்த இதழில் பார்த்தோம். மேலும் பஞ்சகவ்யா குறித்து சோமசுத்தரம் சொன்ன தகவல்கள் இங்கே…
“ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் 5 வருஷம் வேளாண் அலுவலரா வேலை பார்த்தேன் .அப்போ, நீர் மற்றும் நிலப்புலனாய்வு குறித்து ஆராய்ச்சி செஞ்சப்போ… மண், நீர் ரெண்டுமே வளமில்லாம இருக்குறது தெரிய வந்துச்சு. அதுக்குக் காரணத்தை ஆராயுறப்போ, ரசாயனம் பயன்பாடுகள்தான்கிறதும் தெளிவாச்சு. அதை நிவர்த்தி செய்ற மாதிரி, ஒவ்வொரு பகுதியோட மண் வளத்துக்கு ஏத்த அங்கக உர மேலாண்மை குறித்து ஒரு குறிப்புத் தயாரிச்சேன். பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்த அனுபவத்தில்தான்,கொடுமுடி டாக்டர் -நடராஜன் பயிர்களுக்குத் தகுந்த மாதிரி உருவாக்கிக் கொடுத்த பஞ்சகவ்யாவையும் விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கணுங்கிற நோக்கத்தில்…. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைஞ்சு பல களப் பரிசோதனைகளைச் செஞ்சேன்.
அதுல ரொம்ப முக்கியமானது, புதுக்கோட்டை மாவட்டம் கொழுஞ்சி பண்ணையில் நான் மேற்கொண்ட வயல் பரிசோதனை. நான் மேற்கொண்ட வயல் பரிசோதனை. எள், பாசிப்பயறு, சூரிய காந்தி, நிலக்கடலைனு பல பயிர்களுக்குப் பஞ்சகவ்யாவை இலைவழி ஊட்டமாகக் கொடுத்து ஆய்வு செஞ்சேன். அதுல, பஞ்சகவ்யா நல்ல பலன் கொடுக்குறது உறுதியாச்சு.
அந்தச் சமயத்துல,புதுச்சேரியில் நடந்த ஒரு கருத்தரங்குல பஞ்சகவ்யாவுக்கு அங்கீகாரம் கொடுக்குறது சம்பந்தமா ஒரு விவாதம் நடந்துச்சு. அதுல நம்மாழ்வார் அய்யாவும் கலத்துகிட்டார். அந்த விவாதத்துல,’அறிவியல் பார்வையில் பஞ்சகவ்யா’ங்கிற தலைப்புல பஞ்சகவ்யாவின் வேதியியல் மூலக்கூறுகளைப் புள்ளிவிவரங்களோடு பேசினேன். அதைக் கேட்டு கைதட்டிப் பாராட்டினார், நம்மாழ்வார் அய்யா. ‘பல்கலைக்கழகமே பஞ்சகவ்யாவை ஏத்துக்கிட்டது,மனசுக்கு மகிழ்ச்சிய கொடுக்குது’னு அப்போ அய்யா சொன்னார். அவர் சொன்னது போலவே இன்னிக்கு பல்கலைக்கழகமே பஞ்சகவ்யாவை உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யுது” என்ற சோமசுந்தரம் தொடர்ந்தார்.
பஞ்சகவ்யாவில் உள்ள நன்மை செய்யும் மூலக்கூறுகள்
ஒரு கிராம் பஞ்சகவ்யாவில் தழைச்சத்தை நிலைநிறுட்த்தும் அசோஸ்பைரில்லம் 10,000 கோடி உள்ளது.
தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசிட்டோஃபேக்டர் ஒரு கிராமுக்கு 9,000 கோடி உள்ளது
மணிச்சத்தைக் கரைத்துக்கொடுக்கும் பாஸ்போ பாக்டீரியா ஒரு கிராமுக்கு 7,000 கோடி
நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஒரு கிராமுக்கு 6,000 கோடி என்ற அளவில் உள்ளன.
சத்துக்கள் அளவு
தழைச்சத்து 6,650 பி.பி.எம்
மணிச்சத்து 4,310 பி.பி.எம்
சாம்பல் சத்து 5,200 பி.பி.எம்
சோடியம் 1,200 பி.பி.எம்
சுண்ணம்பு 1,000 பி.பி .எம்
மக்னீசியம் 840 பி.பி.எம்
குளோரைடு 248.50 பி.பி எம்
போரான் 0.442 பி.பி.எம்
மாங்கனீசு 14.8 பி.பி.எம்
இரும்பு 142.2 பி.பி எம்
துத்தநாகம் 82 பி.பி.எம்
செம்பு 58 பி.பி.எம்
கந்தகம் 0.56 பி.பி எம்
நன்றி! பசுமை விகடன்
panjakavya enna enna searka v
eandum