மத்திய கேபினட் குழு, புதிய உரக் கொள்கை-2015-இல் மேற்கொள்ளட்டப்பட்ட திருத்தங்களுக்கு 2017 மார்ச் 31 அன்று ஒப்புதல் அளித்தது.இப்புதிய திருத்தமானது உள்நாட்டிலேயே உர உற்பத்தியை அதிகரிப்பது குறித்ததாகும். இதன்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் உர உற்பத்தியைஅதிகரிக்கவேண்டும்.
2015 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்ப்ட்டப் புதிய உரக் கொள்கையானது மத்திய அரசின் மானிய சுமையைக் குறைக்கவும்,யூரயா உற்பத்தியில் தன்னிறைவடையவும் உள்நாட்டு யூரியா உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவும் வலியுறுத்தியது.மேலும், வேளாண் உற்ற்பத்தி தவிர இதர சில தொழில்சார் நடவடிக்கைகளுக்கு யூரியா பயன்படுத்துவதைத் தடுக்கவும், நைட்ரஜனைப் பயன்படுத்திக்கொள்ளும் திறனைஅதிகரிக்கவும் யூரியாவின் மேல் வேப்பிலை கரைசலை தெளிக்கும் முற்றை அறிமுகப்படுத்தப்பட்டது.