நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை:
நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் –
- பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
- உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.
- பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும்.
- கெட்டசதை போட்டிருக்க கூடாது.
- உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும்.
- பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும்.
- தொட்டால் பால் வழிய வேண்டும்.
- பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும்.
- பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.
- இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும்.
- இரண்டாம் ஈற்றிலிருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகி வரும் 5-ம் ஈற்று முதல் பால் அளவு குறைய தொடங்கி விடும்.
- வால் நீண்டு இருக்க வேண்டும்.
- மிகச்சிறிய மடியாக இருந்தால் பாலின் அளவு குறைவாகவே இருக்கும்.
- மடி தொங்கிக் கொண்டும் துருத்திக் கொண்டும் இருக்கக் கூடாது.
- நான்கு காம்புகளும் சீராக இருக்க வேண்டும். தெற்கும், மேற்கும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
- பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும். மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும்.
நன்றாக அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். - பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும்.
- மாட்டின் தோல் மென்மையானதாக இருக்க வேண்டும்.
- மூக்குத் தண்டு நேராக இருக்க வேண்டும்.
- கண்கள் பிரகாசமாக துருதுருவென்று இருக்க வேண்டும்.
- எருமைகள் அதிக பால் தருபவை : 1.முர்ரா 2.நாக்பூரி 3. மெக்சேனா 4.தில்லி இவை உயர் சாதி இனங்கள். முர்ரா எருமைகளைத் தமிழ்நாட்டில் பலர் வளர்த்து வருகிறார்கள்.
- நம்நாட்டு எருமைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால் தரும்.
- எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகம். எருமைப்பாலுக்கு நல்ல விலை உண்டு.
- சந்தையில் மாடு வாங்குவதை தவிர்த்து நம்பிக்கையான பண்ணைகளில் வாங்கலாம்.
- பக்கத்து தோட்டத்தில், பக்கத்து ஊரில் விசாரித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
- மூன்று முறை பால் கறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும்
- .
சந்தையில் வாங்கும் மாட்டில் உள்ள குறைபாடுகள் : - கடைவாய்ப் பல் இல்லாமல் இருக்கும்.
- தோட்டத்தில் வந்தவுடன் தின்ற வைக்கோலை அசை போட்டிடாமல் கட்டி கட்டியாக கக்கி வைக்கும்.
- மடியைக் கட்டி கொண்டு வந்து தரகர்கள் பால் கறந்து காட்டு வார்கள்.
- ஆறு, ஏழு மாதமான கறவையை வேறு மாட்டின் இனங்க ளென்று கொண்டு வந்து இளங்கன்று மாடு என்று நம்ப வைப்பார்கள்.
- தோட்டத்திற்கு வந்தவுடன் அந்தக்கன்றுக்கு மாடு பால் தராது.
- சுழி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கெட்ட சுழியைச் சூடு போட்டு அழித்து விடுவார்கள்.
- போன ஈற்றில் மதநோய் வந்த மாடாக இருக்கும்.
- முறிந்து போன கொம்பை ஒட்டிச்சாயம் பூசிக்கொண்டு வருவார்கள். இப்படிப் பட்ட தில்லுமுல்லுகள் ஏராளமாக நடக்கும்.
- அதனால் சந்தையில் மாடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
- நாட்டுக்கோழி :
- வளர்க்க ஆசைப்படுபவர்கள் கிராமத்திலேயே சில குஞ்சுகளையும், சேவலையும் வாங்கி வளர்க்கலாம்.
- இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை. திறந்தவெளியில் சென்று மேய்ந்து வரும். தோட்டத்தில் வளர்ப்பதற்கு இது மிகவும் ஏற்றது.
- நாய், நரி, பூனைகள், கோழிக்கு பகைவர்கள். நாட்டுக்கோழி தோட்டத்தில் வளர்ப்பதால் ஏற்படும்
- நன்மைகள் : பயிரைத்தாக்கும் புழுப்பூண்டுகளைத் தின்னும் கரையான் எங்கிருந்தாலும் விடாது.
- புழு பூச்சிகளைப் பிடித்து தின்று விடுவதால் மருந்து தெளிக்கும் செலவு மிச்சமாகும்.
- மாலையில் கொட்டிலில் அடைப் பதற்கு முன்பு கம்பு, ராகி, மக்காச்சோள குருணை, உடைத்த நாட்டுச்சோளம் ஆகியவற்றை இறைத்து வைக்கலாம்.
- ராணிக்கட் நோயைத் தாக்கும் தடுப்பூசியை குஞ்சுகளுக்கு ஒரு மாதம் ஆனவுடன் போட வேண்டும். மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.
- – டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
சோதனை
சிறப்பான செய்தி
good
thank you sir
super awesome