Skip to content

நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை:

நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் –

  • பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
  • உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.
  • பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும்.
  • கெட்டசதை போட்டிருக்க கூடாது.
  • உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும்.
  • பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும்.
  • தொட்டால் பால் வழிய வேண்டும்.
  • பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும்.
  • பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும்.
  • இரண்டாம் ஈற்றிலிருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகி வரும் 5-ம் ஈற்று முதல் பால் அளவு குறைய தொடங்கி விடும்.
  • வால் நீண்டு இருக்க வேண்டும்.
  •  மிகச்சிறிய மடியாக இருந்தால் பாலின் அளவு குறைவாகவே இருக்கும்.
  • மடி தொங்கிக் கொண்டும் துருத்திக் கொண்டும் இருக்கக் கூடாது.
  • நான்கு காம்புகளும் சீராக இருக்க வேண்டும். தெற்கும், மேற்கும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
  • பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும். மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும்.
    நன்றாக அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
  • பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும்.
  • மாட்டின் தோல் மென்மையானதாக இருக்க வேண்டும்.
  • மூக்குத் தண்டு நேராக இருக்க வேண்டும்.
  • கண்கள் பிரகாசமாக துருதுருவென்று இருக்க வேண்டும்.
  • எருமைகள் அதிக பால் தருபவை : 1.முர்ரா 2.நாக்பூரி 3. மெக்சேனா 4.தில்லி இவை உயர் சாதி இனங்கள். முர்ரா எருமைகளைத் தமிழ்நாட்டில் பலர் வளர்த்து வருகிறார்கள்.
  • நம்நாட்டு எருமைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால் தரும்.
  • எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகம். எருமைப்பாலுக்கு நல்ல விலை உண்டு.
  • சந்தையில் மாடு வாங்குவதை தவிர்த்து நம்பிக்கையான பண்ணைகளில் வாங்கலாம்.
  • பக்கத்து தோட்டத்தில், பக்கத்து ஊரில் விசாரித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
  • மூன்று முறை பால் கறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும்
  • .
    சந்தையில் வாங்கும் மாட்டில் உள்ள குறைபாடுகள் :
  • கடைவாய்ப் பல் இல்லாமல் இருக்கும்.
  • தோட்டத்தில் வந்தவுடன் தின்ற வைக்கோலை அசை போட்டிடாமல் கட்டி கட்டியாக கக்கி வைக்கும்.
  • மடியைக் கட்டி கொண்டு வந்து தரகர்கள் பால் கறந்து காட்டு வார்கள்.
  • ஆறு, ஏழு மாதமான கறவையை வேறு மாட்டின் இனங்க ளென்று கொண்டு வந்து இளங்கன்று மாடு என்று நம்ப வைப்பார்கள்.
  • தோட்டத்திற்கு வந்தவுடன் அந்தக்கன்றுக்கு மாடு பால் தராது.
  • சுழி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கெட்ட சுழியைச் சூடு போட்டு அழித்து விடுவார்கள்.
  • போன ஈற்றில் மதநோய் வந்த மாடாக இருக்கும்.
  • முறிந்து போன கொம்பை ஒட்டிச்சாயம் பூசிக்கொண்டு வருவார்கள். இப்படிப் பட்ட தில்லுமுல்லுகள் ஏராளமாக நடக்கும்.
  • அதனால் சந்தையில் மாடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
  • நாட்டுக்கோழி :
  • வளர்க்க ஆசைப்படுபவர்கள் கிராமத்திலேயே சில குஞ்சுகளையும், சேவலையும் வாங்கி வளர்க்கலாம்.
  • இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை. திறந்தவெளியில் சென்று மேய்ந்து வரும். தோட்டத்தில் வளர்ப்பதற்கு இது மிகவும் ஏற்றது.
  • நாய், நரி, பூனைகள், கோழிக்கு பகைவர்கள். நாட்டுக்கோழி தோட்டத்தில் வளர்ப்பதால் ஏற்படும்
  • நன்மைகள் : பயிரைத்தாக்கும் புழுப்பூண்டுகளைத் தின்னும் கரையான் எங்கிருந்தாலும் விடாது.
  • புழு பூச்சிகளைப் பிடித்து தின்று விடுவதால் மருந்து தெளிக்கும் செலவு மிச்சமாகும்.
  • மாலையில் கொட்டிலில் அடைப் பதற்கு முன்பு கம்பு, ராகி, மக்காச்சோள குருணை, உடைத்த நாட்டுச்சோளம் ஆகியவற்றை இறைத்து வைக்கலாம்.
  • ராணிக்கட் நோயைத் தாக்கும் தடுப்பூசியை குஞ்சுகளுக்கு ஒரு மாதம் ஆனவுடன் போட வேண்டும். மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.
  • டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

5 thoughts on “நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj