விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசாங்கத்தின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
‛முதல்வர் கணினி தமிழ் விருது’ என்னும் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி வளர்ச்சியைக் கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு ‘முதல்வர் கணினி தமிழ் விருது’’ வழங்கி. தமிழக அரசாங்கம் ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு விவசாயம் குறுஞ்செயலி தெரிவு செய்யப்பட்டது.
விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம் அந்தச் செயலியை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி செல்வ.முரளிக்கு நேற்று (25-04-2017) விருது வழங்கிச் சிறப்பித்தார்.
விவசாயம் குறுஞ்செயலி உருவாகக்காரணமான இயற்கை விவசாயப் பிதாமகன் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கும், உலகின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குறுஞ்செயலிக்காக இன்றுவரை உழைத்து வரும் விசுவல்மீடியா குழுமங்களின் தொழில்நுட்பர்கள் சதிஷ், புவனேஸ்வரி, சத்யா, கோகிலா, பிரியா, காயத்ரி, தேவயானி, செந்தில்குமார், வனிதா ஆகியோருக்கும், பசுமை விகடன் இதழுக்கும், மேலும் இந்த குறுஞ்செயலியை நிறுவி பல கருத்துக்களைக் கூறி பகிர்ந்துக்கொள்ளும் பயனாளர்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்.
இந்த பொன்னான தருணத்நேதில் விசுவல்மீடியா குழுமம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. உங்களின் தொடர் ஆதரவு எப்போதும் எங்களை வழி நடத்தும். நம்மை மேலும் செம்மைப்படுத்தும், உயர்த்தும் என்பதைக் கனிவோடு நினைவூட்டுகிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி என்ற ஒரு சிறிய ஊரிலிருந்து இயங்கும் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த இந்த விருது எங்களுக்கும், எங்கள் ஊழியர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நாங்கள் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம்.
விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாகர விவசாயம் குழுவில் சார்பில் அக்ரிசக்தி என்ற புதிய நிறுவனம் விவசாயி்களுக்கு என்று ஒரு விற்பனை சந்தையை உருவாக்கி விரைவில் வெளியிட உள்ளது. மேலும் விவசாயி்களுக்குத் தேவையான அளவில் சிறிய அளவிலான கூட்டுறவு சந்தைமுறையினையும் வெளியிட முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது.
செல்வமுரளி
வாழ்த்துகள் நன்பரே. தொழில்நுட்பர்கள் சதிஷ், புவனேஸ்வரி, சத்யா, கோகிலா, பிரியா, காயத்ரி, தேவயானி, செந்தில்குமார், வனிதா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.