கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படுவது மட்டுமின்றி, சர்க்கரை பற்றாக்குறை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள 5 டன் சர்க்கரை மூலப் பொருட்களில், 3 டன் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 டன் மகராஷ்டிராவுக்கும், அரை டன் மேற்கு வங்காளத்திற்கும், ஒடிசாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், வட மாநிலங்களில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது. ஆனால் மகராஷ்டிரா, தமிழகம் மற்றும் சில தென்னிந்திய மாநிலங்களில் கரும்பு விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்ததால், 2016-17-சர்க்கரை ஆண்டு முடிவான செப்டம்பர் மாதத்தில் தெற்கு பிராந்தியத்தில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி: