Site icon Vivasayam | விவசாயம்

நோனி பழ சாகுபடி..!

நோனியை விதை மற்றும் விண்பதியன் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பெரிய பழங்கள் கொடுக்கும் மரங்களிலிருந்து பழங்களைச் சேகரித்து விதைகளைப் பிரித்து, அவற்றை ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும். இப்படி வளரும் நாற்றுகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் நட்டு, 2 மாதங்கள் வரை வளர்த்து, பிறகுதான் நிலத்தில் நடவுசெய்ய வேண்டும். 2 சதுரஅடியில் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழி ஆறிய பிறகு செம்மண், மணல், தொழுவுரம் ஆகியவற்றைச் சமஅளவில் கலந்து குழிக்குள் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதிகமான கன்றுகள் நடவு செய்யும்போது 10 அடி இடைவெளியில் இருக்க வேண்டும்.

ஹவாய் நாட்டில் இருந்து வந்த மரங்களில் பெரிய சதைப்பற்றுள்ள பழங்கள் கிடைக்கின்றன. சந்தை வாய்ப்பை உறுதி செய்துகொண்ட பிறகு, அதிக அளவில் நோனி மரங்களை வளர்ப்பது நல்லது. வீட்டுக்கு 2 அல்லது 3 நோனி மரங்கள் இருந்தால், வீட்டில் உள்ள அனைவரும் ஆண்டு முழுவதும் நோனிப் பழச்சாறு குடித்து நோயில்லாமல் வாழ முடியும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version