சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கக்கூடிய துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை.. போன்ற முப்பது வகையான மூலிகை நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, ஒவ்வொரு மூலிகையின் மருத்துவப் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.
தொடர்புக்கு, தொலைபேசி : 04298 243773
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral