உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும்.
அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி மதிப்புக்கூட்டப்பட்ட வைக்கோலில் ஒருவித நறுமணம் வீசும். அதனால் கால்நடைகள் மிச்சம் வைக்காமல் விரும்பி எடுத்துக்கொள்ளும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral