நீர் பாசி வகையைச் சேர்ந்த அசோலா கால்நடைகளுக்கு முக்கியமான மாற்றுத் தீவனமாகும். 200-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருக்கின்றன. இதில் உணவாக பயன்படும் பாசிகளில் அசோலாவும் ஒன்று. 30 சதவிகிதம் புரதச்சத்தும், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளன. சிறிய பரப்பிலேயே குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி அசோலா வளர்க்கலாம்.
9 அடி நீளம், 3 அடி அகலத்தில், பாலி எத்திலீன் ஷீட் கொண்டு தொட்டி போல அமைக்க வேண்டும். இதில், 10 கிலோ மண், 5 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைப் பரப்பி, அரை அடி உயரத்துக்குச் சுத்தமான தண்ணீரை நிரப்ப வெண்டும். பிறகு, 30 கிராம் ராக் பாஸ்பேட் (பாறைத்தூள்) போட்டு நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு அரைக்கிலோ அசோலா பாசியை இட வேண்டும். தண்ணீரின் அளவு குறையாமல் பராமரித்து வந்தால், பத்து நாட்கள் கழித்துத் தினமும் இரண்டு கிலோ அளவு அசோலா கிடைக்கும். இதை மரத்தடியில் வளர்ப்பது நல்லது.
ஓர் ஆட்டுக்கு தினமும் 150 கிராம் வரை அசோலா கொடுக்கலாம். 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு தினமும் அரைக்கிலோ அசோலா கொடுக்கலாம். ஆரம்பத்தில் மாடுகள் இதைச் சாப்பிடாமல் மறுத்தால், பாசியை நன்கு கழுவி உலர்த்திக் கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற தீவனங்களோடு சேர்த்துக் கொடுத்தும் மாடுகளை சாப்பிடப் பழக்கலாம்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral