”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும்.
கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, ஆகிய தீவனப்பயிர்களில் தாதுக்கள் அதிகமுள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால், கால்நடைகளின் தாது உப்புத் தேவை பூர்த்தியாகும். கோ.எஃப்.எஸ்-29 ரகத் தீவனப்பயிரை மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். ஓரளவு மழைக் கிடைத்தாலே நன்கு வளர்ந்துவிடும். இதைப் பச்சையாகக் கொடுக்காமல், வெயிலில் காயவைத்து வைக்கோல் போல மாற்றி, உலர் தீவனமாகவும் கொடுக்க வேண்டும். இதில் சுண்ணாம்பும், கார்போஹைட்ரேட்டும் இருப்பதால், பாலில் கொழுப்புச்சத்து கூடும்”
வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்
“சவுண்டல், வேலிமசால், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கோ.எஃப்.எஸ்-29 ஆகிய தீவனப்பயிர்களுக்கு அதிகத் தண்ணீர் தேவைப்படாது. ஓரளவு தண்ணீர் வளம் இருக்கும் போதே இவற்றைச் சாகுபடி செய்துவந்தால், வறட்சி காலங்களில் சில மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும். இவை அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் பதப்படுத்தி ‘ஊறுகாய்ப் புல்’ தயாரித்து வைத்தால், வறட்சிக் காலங்களை எளிதாகச் சமாளிக்க முடியும். அதேபோல உலர் தீவனமான வைக்கோலையும் தரம் உயர்த்தி வைத்துகொள்ளலாம். வறட்சிக் காலத்தில் கைகொடுக்கும் இன்னொரு தீவனம் அசோலா. குறைவான தண்ணீரிலேயே வளரும் இதை, உற்பத்தி செய்து கால்நடகளுக்குக் கொடுக்கலாம். பசுந்தீவன விதைக்கரணைகள், அசோலா விதைப்பாசி போன்றவை கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களில் பதிவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன. என்கிறார், ரவிமுருகன்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral