Site icon Vivasayam | விவசாயம்

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்.

1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை
2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை
3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை

மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும் வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும்.

அத்துடன்

மஞ்சள் தூள் 50 முதல் 100 கிராம் சேர்த்து,

மாட்டு சிறுநீரில் 15 லிட்டர்,

சாணம் ஒரு கிலோ

ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி கரைசல் தயாரித்து டிரம்மில் உள்ள இடித்த இலைகள் மீது ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். இது நன்கு ஊறிய பிறகு, அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

அனைத்து வகைப் பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய சாறு என்ற அளவில் கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version