Site icon Vivasayam | விவசாயம்

கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

தேவையானவை :

1. வேப்பெண்ணெய் -100 மில்லி,
2. கோமியம் – ஒரு லிட்டர் ,
3. கற்பூரம் – 10 வில்லை
4. சோப்பு

தயாரிப்பு முறை :

வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும்.

கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம்.

நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும்.

நெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.

பருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது, இந்த இயற்கை பூச்சிவிரட்டி.

வெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது.

வேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுவதுடன் அளவுக்கு அதிகமாக பூக்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்கும் அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version