Site icon Vivasayam | விவசாயம்

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,

பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ,

துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,

கொய்யா இலை 1/2 கிலோ,

கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ

செய்முறை

இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.

நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக இலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

 இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Exit mobile version