Skip to content

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே..

“மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்காமல் வாரம் ஒரு தடவையோ, நாலு நாளைக்கு ஒரு தடவையோ அதிகத் தண்ணீரை சிலர் பாய்ச்சுவாங்க. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் அன்றைக்குத் தேவையான அளவைத்தான் செடி எடுத்துக்கொள்ளும். ஒரே நேரத்தில் அதிகத் தண்ணீர் வேரைச் சுற்றி இருக்கும்போது சுவாசம் தடைபடுவதோடு அந்த தண்ணீர் வீணாக ஆவியாகத்தான் போகும். அப்படித் தினமும் தேவையான அளவு தண்ணீரைக் கொடுக்கும் போது ஆரோக்கியமாக செடி வளரும். தேவையான அளவு தண்ணீரைக் கொடுப்பது சொட்டுநீர்ப் பாசன முறையில்தான் சாத்தியம்.

ஒரு எடுத்துக்காட்டிற்கு பார்த்தோம் என்றால்.. தக்காளிச் செடி இளம் இளம்பயிராக இருக்கும்போது தினமும் கால் லிட்டர் தண்ணீர் போதுமானது. அதுவே கொஞ்சம் வளர்ந்த பிறகு தினமும் 2 லிட்டர் தண்ணீர் தேவை. அதன்பிறகு 3 லிட்டர், 5 லிட்டர் என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மகசூலுக்கு வரும்போது தினமும் 20 லிட்டர் தண்ணீர் தேவை. வாய்க்கால் பாசனத்தில் இப்படித் தேவையான அளவை தினமும் கொடுக்க முடியாது. மடையைத் திறந்துவிட்டால் ஒரே அளவில்தான் பாயும். ஆனால் சொட்டுநீர்ப் பாசன முறையில் தேவையான அளவில் சரியாக கொடுக்க முடியும்.. வாய்க்கால் பாசனம் மூலமாக ஏக்கருக்குப் பாய்ச்சும் தண்ணீரை சொட்டுநீர் மூலமாக 3 ஏக்கருக்குப் பாய்ச்ச முடியும். அதேபோல் சொட்டுநீர் முறையில் உரங்களைக் கரைத்து கொடுக்கும்போது, நேரடியாக கொடுக்கும் போது, நேரடியாக வேருக்குப் பக்கத்தில் போய்ச் சேர்வதால், முழுமையான பலன் கிடைக்கும். தவிர களைகள் அதிகம் வராது. பயிர்களில் ஒரே ஒரே சீரான வளர்ச்சி இருப்பதால் மகசூல் அதிகமாக கிடைக்கும். அதனால் பல வகைகளில் சொட்டுநீர்ப் பாசனம் நமக்கு லாபமாக இருக்கும்” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj