இன்றைய காலகட்டத்தில்
194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள்
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள்.
2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்
2014-ல், உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது.
4-ல் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
உலகமே பணத்தினை நோக்கிச் செல்லும் இந்த காலக்கட்டத்தில் உணவுவங்கி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆம், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது கடைசியில் சேருமிடம் என்னவோ நம் வயிறுதான். ஆனால் இன்றைய மனிதன், இன்றைய காலக்கட்டத்தில் உணவினைக்கூட குறைத்துவிட்டு பணத்தினை நோக்கி பயணப்பட வைக்கும் இந்த சூழ்நிலை எதிர்காலத்தில் இன்னமும் மோசமாகும். ஆம் ஏனெனில் 2030-ல் இப்போது இருக்கும் மக்கள்தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். அப்போது நாம் உண்ணும் உணவை இரண்டு பேரிடம் பங்கு போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையெனில் உணவு உற்பத்தியினை இன்னமும் இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டியிருக்கும். நன்நீரின் பயன்பாடு இப்போது உள்ளவற்றை விட பல மடங்கு தேவையாக இருக்கும் இவற்றையெல்லாம் இயற்கை சமநிலை மாறாமல் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்.
உணவு வங்கி
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை விதை கிடங்கு என்பது இருந்து வந்தது விதைகளை பாதுகாக்க. அதே போல்தான் உணவு கிடங்கும். எங்கெல்லாம் உணவுப்பொருட்களை உற்பத்தியாகிறதோ அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி சேமித்து வைத்து தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்துவதுற்கு உணவு வங்கி அவசியமாகிறது. உணவு வங்கி என்பது தேவையான விதைகளை கொடுத்து, உற்பத்தி செய்து அவற்றை வாங்கி விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று உற்பத்தி செய்வது வரை, இந்த உணவு வங்கியின் வேலை. ஒருபுறம் புதிய புதிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். மறுபுறம் உணவு உற்பத்திக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்தால் ஒழிய எதிர்கால சந்ததிகள் பசியில்லாமல் இருக்கமுடியும்.
செல்வமுரளி..
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral