Vivasayam | விவசாயம் ⚡ AMP

இரண்டு வகை பஞ்சகவ்யா !

By Editor | Dec 21, 2016

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா.

சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் ஒரு பங்கு என்று கலந்து தயாரிப்பது சம்ஹார கிரமா.

இவற்றைத் தயாரிக்கக் கறுப்பு நிறப் பசுவில் இருந்து பால், மயிலை நிறப் பசுவில் இருந்து தயிர், சாம்பல் நிறப் பசுவில் இருந்து நெய், கபிலை நிறப் பசுவில் இருந்து சிறுநீர், செவலைப்பசுவில் இருந்து சாணம் எனச் சேகரிக்க வேண்டும். அப்படிச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிரமா வகைப் பஞ்சகவ்யா மனோ வேக ஆற்றல் கொண்டிருக்கும்” என்று பழங்கால முனிவர் எழுதிய ஒரு நூலில் பஞ்சகவ்யா குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

நன்றி

பசுமை விகடன்

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..