ஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதே போல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது; அதனால் உப்புத்தண்ணீர் நிலம் கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்து விட வேண்டும். 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து, அதில், ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை கொட்டி, மேல் மண்ணால் குழியை மூட வேண்டும். பிறகு குழியின் நடுவில் ஜாதிக்காய் செடியை நடவு செய்ய வேண்டும். இதற்குப் பாசனத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் கூடுதலானாலும் சரி, குறைந்தாலும் சரி.. அது ஆபத்துதான்.
முதல் ஆண்டில் ஒரு செடிக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 10 லிட்டர் தண்ணீரை அதிகப்படுத்த வேண்டும். ஐந்தாம் ஆண்டுக்கு மேல், ஒரு மரத்துக்குத் தினமும் 50 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஜாதிக்காய் இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது என்பதால் நோய்த் தாக்குதல் இருக்காது. ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் கொடுக்க வேண்டும். காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காய்களில் இருந்து பத்ரியை தனியாகவும், காயைத் தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும். பத்ரியை நிழலிலும், காயை வெயிலிலும் காய வைத்து சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். ஏழு ஆண்டுகளுக்கு மேல் மகசூல் கொடுக்கத் தொடங்கும். 10 வயதான ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும், 2 கிலோ பத்ரியும் கிடைக்கும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
விளம்பரம்