வடகிழக்கு பருவமழை இன்றுவரை திசை மாறி செல்வதால் தமிழகத்திற்கு இம்முறை 80% மழை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் ஒரளவேனும் மழை தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த சூழ்நிலையில் நாம் கிடைக்கும் மழை நீரை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு பெருவெள்ளம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக வீட்டில் மழை நீர் சேகரிப்பை அரசாங்கம் கட்டாயமாக்கினாலும் இன்றுவரை அதை செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் மழை நீர் சேகரிப்பில் ஈடுபடவேண்டும்.
பொதுவாக மழை பொழியும்போது பெரும்பாலும் மழை நீர் மொட்டை மாடியில் விழுந்து வீணாகத்தான் போகின்றன. அதை முறையாக சேமித்தாலே பல நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் கீழேவிழாமல் சிறிது உயரத்தில் தார்பாலின் விரித்து அதன் மையப்பகுதியில் நீர் சேரும்படி செய்து, மையப்பகுதியில் ஒரு குழாயை இணைத்து நீர்த் தொட்டியில் சென்று சேரும்படி செய்தால் மழை நீர் முழுதும் நீர்த்தொட்டியில் சேகரமாகும், ஏனெனில் மழை நீர் கீழே விழுந்தால் தரையும் சிறிது தண்ணீரை உறிஞ்சும். நீர்த்தொட்டியில் நீர் மிஞ்சினால் அதை வீட்டுத்தோட்டத்திற்கும் அல்லது இன்னொரு தொட்டியில் சென்று சேரும்படி செய்யவேண்டும்.
மழை நீரை சேமிக்க இது ஒரு சிறந்த வழிமுறை. எனவே தயங்காமல், துரிதமாக செயல்பட்டால் நீரால் நாம் வளம்பெறலாம்.
தொகுப்பு
– செல்வமுரளி.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
விளம்பரம்
“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”
ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”
மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945
நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV
இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..