தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு, 32 மாவட்டங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையளவு குறித்து, வேளாண் பல்கலை, காலநிலை ஆராச்சி மையம் கணக்கிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியான மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு சராசரியாக, 464மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட, 19 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ பெய்யவும் வாய்ப்புள்ளது.
வரும், 20 ம் தேதி முதல், மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஏரிகள், குளங்களை தூர்வாரி பரமாரித்து, நிலத்தடி நீரை சேமிக்கலாம். விவசாயிகள் பண்ணை குட்டை, வரப்பு வெட்டி பயிர் விளைச்சலை பெருக்குவதோடு, மண்வளத்தையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் பெய்த சராசரி மழையளவு
2011 |
1100 மி.மீ., |
|||
2012 |
371 மி.மீ., |
|||
2013 |
535 மி.மீ |
|||
2014 |
733 மி.மீ |
|||
2015 |
690 மி.மீ |
|||
நடப்பாண்டு தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை |
||||
மாவட்டம் |
சராசரி மழையளவு |
எதிர்பார்க்கப்படும் மழையளவு |
||
(மி.மீ.,) |
(மி.மீ.,) |
|||
கோவை | 328 | 343 | ||
திருப்பூர் | 314 | 323 | ||
ஈரோடு | 314 | 315 | ||
சென்னை | 788 | 731 | ||
வேலூர் | 348 | 348 | ||
திருவண்ணாமலை | 445 | 432 | ||
சேலம் | 369 | 366 | ||
நாமக்கல் | 291 | 278 | ||
தர்மபுரி | 329 | 355 | ||
கிருஷ்ணகிரி | 289 | 302 | ||
திருச்சிராப்பள்ளி | 390 | 374 | ||
தஞ்சாவூர் | 549 | 530 | ||
கரூர் | 314 | 344 | ||
நன்றி
காலைக்கதிர்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral