பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ’கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது,
”செலவைக் குறைக்க சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சேர்க்க ஆரம்பித்தார் பழனிச்சாமி. இதில் தவறு ஏதும் இல்லை. கனிந்த பழங்களில் இருந்து இனிப்புத்தன்மை பஞ்சகவ்யாவுக்குக் கிடைத்து விடுகிறது. அதே மாதிரி அவர் நுண்ணுயிரிகளுக்கு தீனியாக சத்துமாவு கலப்பார். இதிலும் தவறு இல்லை.
நாளுக்கு நாள் பஞ்சகவ்யா பரிணாம வளர்ச்சி அடைவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் இப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் பயிர்களுக்கு பயன்படுத்திப் பார்த்து, முழுதிருப்தி ஏற்பட்டால்தான் மற்ற விவசாயிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்றார்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral