இந்திய நிலபரப்பில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் கோடி கனமீட்டர் அளவிற்கு மழை பெய்கிறது. ஆண்டுதோறும் நதிகளில் நீரோட்டம் 1,95,300 கோடி கனமீட்டர் அளவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் பூமியை ஈரப்படுத்தவும், வெப்பத்தாலும் காய்ந்துவிடுகிறது. இந்திய நதிகளில் ஓடும் நீர் 80 முதல் 90% வரை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கிறது.
இதில் உண்மை என்னவென்றால் கிடைக்கும் நீரில், 75% நீர் பாசன நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்க கணக்கீடுகளின் படி நம்நாட்டில் நீர்ப்பாசனத்துக்காக உள்ளுறை வாய்ப்பு 139.9 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இதில் 54% பாசன நீர் ( ஓடும் நீர், தேங்கிய நீர்) பூர்த்தியாகும். மீதுமுள்ள 46% நிலபரப்புக்கான ஆதாரம் நிலத்தடி நீர் மட்டுமே. நமது நாட்டில் விவசாயம் செய்யப்படும் நிகர நிலபரப்பில் அதிக அளவு பாசனத்திற்கு உதவு செய்வது கிணற்று நீர் பாசனமே (61.7%). கால்வாய்ப்பாசனம் 26.3%, ஏரிப்பாசனம் 2.59%. இதில் பெரிய விசயம் என்னவெனில் ஏரிப்பாசனம் 2000ல் இருந்த அதே நிலைமையில்தான் இன்றுவரை இருக்கிறது. இதனால் ஏரிப்பாசன நிலரப்பரப்பு அதிகரிக்கப்படாமல் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்..
மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழப்பட்ட இவ்வுலகில் 0 .4% மட்டுமே மனிதர்களால் பயன்படுத்த இயலும். இந்த 0.4%ல் 70% விவசாயத்திற்கும், 22 % தொழில்துறைக்கும், 8% வீட்டு உபயோகத்திற்கும் செலவிடப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரும் மாசுப்பட்டுக்கொண்டிருக்கிறது கவலைக்குரிய விசயம். ஏற்கனவே இந்தியாவில் சரசாரியாக மனிதர்களுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் நீர்களில் உள்ள மாசுக்களால் அவற்றினை மனிதர்கள் பயன்படுத்த இயலாத சூழ்நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். இப்போது கிடைக்கும் ஆற்று நீர்களில் கோலிபார்ம் என்ற பாக்டீரியாவும், உள்ளீயம் என்ற நச்சும் அளவுக்கு மிஞ்சி நீருடன் கலந்துவருவது கவலைக்குரியது. நிலத்தடி நீர் மட்டத்தில் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ள நீர் ஆதாரப்பகுதியில் தான் அதிக மாசுக்கள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிகப்பெரிய உண்மை என்னவெனில் இந்தியாவில் அபரிதமான நீர்வளம் இருக்கிறது. ஆனால் அவற்றினை முறையாக பயன்படுத்தாததால் பல மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை அபாயக்கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவிலயே அதிக மழைப்பொழியும் சிரபுஞ்சியிலயே மழை வருவதற்கு முன்பு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வர தண்ணீர் பிரச்னை இருக்கிறது.
தண்ணீர் என்பது மாநிலம் சார்ந்த பொருள் என்பதால் மாநிலப்பட்டியலில் உள்ளது. எனினும் மத்திய அரசின் பட்டியலில் 56வது இனத்தின் அம்சங்களுக்கு உட்பட்டுதான் செயல்படுத்தவேண்டும்.
56வது இனம் பற்றி நாளை தொடரும்!!
–செல்வமுரளி