காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 300 சதுரடி அளவு அறையில் ஓர் உரியில் நான்கு படுக்கைகள் என்ற விகிதத்தில், 900 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.
காளான் வளர்ப்பு அறை அமைக்க 11 அடி அகலம், 60 அடி நீளம், மூன்றரை அடி அழத்தில் இரண்டு குழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 அடி ஆழம் என பரிந்துரை செய்கிறது) குழியின் மேற்புரத்தில் ஆறடி உயரத்துக்கு ஆர்ச் அமைத்து, ஊதா நிற ‘சில்பாலீன் ஷீட்’ கொண்டு ‘பசுமைக்குடில்’ போல அமைக்க வேண்டும். வெயில் அதிகமான பகுதியாக இருந்தால், பசுமைக்குடிலுக்கு மேல் தென்னகீற்றுகளைப் போட்டு வைக்கலாம். குழியின் தரைப்பகுதியில் அரை அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி வைக்க வேண்டும். குடிலின் ஒரு பக்கத்தில் காற்றை வெளியேற்றும் ‘எக்ஸாஸ்ட் ஃபேன்’ அமைக்க வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral